சென்ரியு
மூழ்கும் நிலம்
வாழும் மனிதன்
யாருக்கு உலகம்...?
வெட்டும் வேதாளங்கள்
உச்சத்தில் விக்ரமாதித்தன்
கதையை நம்பும் கூரிய வாள்...!
உள்வெப்பம் மறைத்து
வெளியே வெளிச்சம்
சாலையோர விளக்குகள்...!
ஏரிக்குள் ஏரியா..?
ஏரியாக்குள் ஏரியா..?
எதுக்குள் எது..??