தேடியே

செல்வ மென்றே மாடதையும்
சேர்த்துக் கொண்ட நம்முன்னோர்,
இல்ல மதிலே ஓருறுப்பாய்
இணைத்தார் நமது வாழ்வினிலே,
புல்லும் மேய இடமின்றிப்
போனதா லின்று கிராமத்தில்,
செல்கிறார் மாந்தர் மாட்டுடனே
சேர்ந்தே தேடிட பிழைப்பினையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-18, 7:18 pm)
பார்வை : 82

மேலே