குப்பைத்தொட்டி

பசியால் வாடும்
பச்சிளங்கன்று நாங்கள்
பசியினை போக்க
பரமபிதாவே வாருங்கள்
உணவுக்காக ஓட்டம்
உணவென்றால் நாட்டம்
உணவுகேட்டால் கோபம்
உணவில்லையேல் மயக்கம்
ஒருசான் வயிற்றுக்கு
ஒவ்வொருநாளும் போராட்டம்
பசியென்று கேட்டால் - காமப்
பசியென்று ஆடுகிறார்வெறியாட்டம்
விவசாயிகளை மதிக்காத
விவசாயத்தை அழிக்கின்ற
வியாபார நாட்டை - எங்கள்
வியர்வையால் கறைநீக்கமுடியாது
எங்களின் நிலைகண்டு
எங்கள் எண்ணம்கண்டு
எங்காவது செல்லுங்கள்
எங்களை தத்தெடுத்துக்கொண்டு
நாடுவிட்டு நாடுசெல்லும்
நாட்டமுண்டு எங்களுக்கு
நாயாக சுற்றுகிறோம்
நாதியில்லை எங்களுக்கு
எங்களுக்கு அன்னை
எப்பொழுதும் குப்பைத்தொட்டிதான்
உணவுகளை பதுக்கிவைக்கும்
உண்மையான பாட்டிதான்
அன்று - ஆஹா மனிதன்
ஐயோ குப்பைத்தொட்டி என்றோம்
ஐயோ மனிதன்
ஆஹா குப்பைத்தொட்டி என்கிறோம் !...