அவள்

#அவள்
மணி சரியாக இரவு 11.30 இருக்கும், வானம் கண்ணீர் விடுவதை போல மழைச்சாரலை சிந்திக்கொண்டு இருந்தது, ஒரு வெள்ளை நிற ஆம்னி கார் வேகமாக அந்த சாலையை கடந்து, சேற்றை வாரி இறைத்தது.அந்த ஆம்னி கார் திடீரென்று நின்றது,அதிலிருந்து கிழிந்த உடையுடன், கசங்கிய நிலையில் உள்ள பூவை போல அவள் தூக்கி எரியப்பட்டாள், அங்கே இருந்த பாதாள சாக்கடையில் விழுந்தாள் சுய நினைவு இல்லாதவளாய்
அங்கே கிடந்தாள் அவள்..

யார் அவள், அவள் தான் இக்கதையின் நாயகி, இந்தநூற்றாண்டில் வாழும் பாரதி கண்ட புதுமைப்பெண்.அவள் ஒரு புரட்சி பெண், சமூக ஆர்வலர், மக்கள் மீதும்,
சமுதாயத்தின் மீதும் பேரன்பு கொண்டவள், ஆணுக்கு பெண் நிகர், என்ற எண்ணம் கொண்டவள்..அவள் 22 வயதாகும் ஒரு யுவதி இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணை பார்ப்பது சற்று கடினம் தான், எல்லாரும் நமக்கென்ன என்று நினைக்கும் காரியங்களை செய்ய துணிபவள்...ஒரு நவ நாகரிக பெண் அவள்..

"பி.ஏ ஜார்னலிசம் மூன்றாமண்டு படிக்கிறாள்".அவள் கல்லூரியில் பல பெண்களுக்கு ரோல் மாடல் அவள் தான்..அவள் படிப்பது ஒரு கோ எஜுகேஸன் காலேஜ் என்றாலும் பல ஆண்களும் அவளை பார்த்து மிரளு வார்கள்.அப்படி ஒரு பெண், அவளுக்கு இந்த நிலைமை யாரும் எதிர் பாரத பேரிடியாய் இருந்தது..

அன்று, சரியாக மாலை 5 மணி இருக்கும், காலேஜ் முடிந்தது, அனைவரும் தங்கள் இடங்களுக்கு சென்றனர்,மழை பெய்து கொண்டு இருந்ததால் சிலர் மழை விடும் வரை அங்கேயே நின்றனர், அப்போதும் மழை விட்ட பாடில்லை..சிலர் இதுக்கு மேல நின்னா லேட் ஆகும்னு,மழையையும் பார்க்காமல் நனைந்த படியே சென்றனர்..

அவளும் தன் தோழிகள் அனைவரும் சென்று விட்டதால்,தானும் செல்லலாம் என்று, பேருந்து நிறுத்தம் நோக்கிநடந்தாள், மழையில் நன்றாக நனைந்து விட்டால், ஒரு வழியாய் பேருந்து நிறுத்ததை அடைந்தாள், யாரும் அங்கு இருக்க மாட்டார்கள் என்று எண்ணினாள், ஆனால், அவள் வயதோத்த பெண் ஒருவள் நின்று கொண்டிருந்தாள், மழைபெய்து கொண்டு இருப்பது தெருவில் இருக்கும் மஞ்சள் நிற விளக்குகளில் பட்டு தெறித்தது..அதை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தால் அவள்..பேருந்து ஒன்றையும் காணவில்லை..தனது கை கடிகாரத்தையும், பேருந்து வரும் திசையும் நோக்கியவளாய் இருந்தாள், அது ஒரு சுழற்சி போல் தொடர்ந்துகொண்டே இருந்தது..மற்றொரு பெண்ணும் பேருந்துக்காக நெடு நேரமாக காத்திருந்தாள்..

அப்போது திடீரென்று ஒரு வெள்ளை நிற ஆம்னி கார் ஒன்று, அங்கு வந்து நின்றது, சிறுது நேரம் கழித்து அதிலிருந்து நான்கு வாலிபர்கள் வெளியே வந்து அந்த மற்றொரு பெண்ணிடம் வம்பு செய்ந்து கொண்டு இருந்தனர், அவள்
வர மறுத்தும் அவளை காரில் ஏற்ற பிடித்து இழுத்தனர்..அவள் படத்ததில் நிலை தடுமரியவளாய் கற்றினால்..உடனே இவள் அவர்களை போய் தடுக்க முயற்சித்தால் அவர்கள் இவளை தள்ளி விட்டனர்..அவள் மேலும் அவர்களை தடுத்து அப்பெண்ணை காப்பாற்ற முற்பட்டால்,

"ஏய் உனக்கும் இதுக்கும் சம்மதம் இல்லை ஓரமாய் போயிடு" என்றான் ஒருவன், இவள் அவனை பார்த்து முறைத்தாள்,மற்றொரு பெண் அவர்களின் கை பிடி இறுக்கத்தில் கண்ணீர் வடித்தால், உடனே இவள் சாலையின் நடுவே சென்று வாகனங்களை மறித்து சிலரை உதவிக்கு அழைத்தாள், சிலர் என்ன என்று உதவ வாகனங்களை நிறுத்திய உடன், அவர்கள் சுதாரித்து கொண்டு காரை எடுத்து கிளம்ப தயாரானார், அப்போது அந்த நால்வரும் இவளை பார்த்து முறைத்தனர்,அவள் அவர்களை பார்த்து "டேய் நில்லுங்கடா எங்கடா போறீங்க"என்று காரின் பின்னால் ஓடினாள், அவர்கள் பறந்து விட்டனர்..

பின்னர் மற்றொரு பெண்ணை அழைத்து ஆறுதல் கூறி,தனது பையில் இருந்த தண்ணீரை கொடுத்து அவளை அமைதி படுத்தினால்,இன்னும் அவளுக்கு நடுக்கம் நின்ற பாடில்லை, அவள் நடுங்கிய தன்கைகளால் கூப்பி நன்றி சொன்னால், விடுங்க சிஸ்டர் இதுக்கு ஏன் தேங்ஸ், என் தங்கச்சியா
இருந்தா நான் செய்ய மாட்டானா?? என்றாள்..

பின்னர், அந்த மற்றொரு பெண்ணை பேருந்தில் ஏற்றி விட்டு விட்டு, தன் பேருந்தில் ஏறினாள், மணி அப்போது 9.30 யை நெருங்கி விட்டது, தான் வர 10.30 ஆகிடும் என்று வீட்டிற்கு போனில் தகவல் சொன்னாள், மழைச்சாரல் சன்னலோரம் நன்றாக வீசியது, சற்று உலர்ந்து இருந்த இவள் ஆடையை மீண்டும் நனைத்தது.. தள்ளி உட்கார்ந்து கொண்டாள்..

அங்கு பேருந்து நிலையத்தில் நடந்ததை நினைத்து பெருமூச்சி விட்டு, சிறுது தண்ணீர் குடித்து அமைதியானால்,பின்னர் தன் நிறுத்தம் வரவே இறங்கி வீடு நோக்கி நடந்தால்,ஒரு கார் வேகமாக அந்த சாலையில் வந்தது,
சேறு அடித்து விடுமென்று ஓரமாய் நின்றாள் அவள்,அந்த கார் வெள்ளை நிற ஆம்னி, ஒரு கர்ச்சிப்பால் அவள் மூக்கையும், வாயையும் பொத்தி காரின் உள்ளே ஏற்றினான், அந்த காரில் இருந்து இறங்கிய வாலிபன் ஒருவன்.."சீக்கிரம் எடுடா, சீக்கிரம் எடு" என்று ஒருவன் கூற அந்த கார் வேகமாக பறந்தது..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (11-Feb-18, 9:13 pm)
Tanglish : aval
பார்வை : 327

மேலே