மனதின் எண்ணம்
வாழ்க்கை ஒரு சித்திரம்போல்
சிலருக்கு அழகுபடுத்திக்க தெரிகிறது
சிலருக்கு கிறுக்க மட்டும்தான் தெரிகிறது
மனிதனுடைய வாழ்வில் கஷ்டம் வரும்போது
புரிந்துகொள்பவன் வாழ்க்கையை வெல்கிறான்
கஷ்டத்தை கண்டு பின் வாங்குபவன்
கஷ்டத்திலேயே மடிகிறான்
சிறு கஷ்டம் வரும்போதுகூட
மற்றவரின் உதவியை நாடுபவன்
வாழ்வில் எல்லாவற்றிற்கும் மற்றவரின்
உதவியை தேடிக்கொண்டே இருக்கிறான்
உதவி செய்ய யாரும் இல்லை
என்று நினைக்கும் மனிதன் அழுகிறான்
தனக்கான உதவியை தனக்குள்ளே
இருக்கிறது என்று எண்ணுபவன் வெல்கின்றன்
வாழ்வில் தாய்வான எண்ணம் கொள்பவன்
வாழ்விலும் தாழ்வான நிலையிலே இருக்கிறான்
உயர்வான் எண்ணம் கொண்டவனே
வாழ்வில் சிகரம்போல் உயர்ந்து நிற்கிறான்
உதவி செய்தபோது மட்டும் ஒருவனை
உயர்வாக கருத்துபவனை விட
உதவி செய்ய முடியாதபோதிலும்
உயர்வாக கருத்துபவனே வாழ்வில்
மிகவும் உயர்ந்தவனாக திகழ்கிறான்
தயக்கம் கொள்பவன் எதையும்
வெல்ல கடினமாக கருதுகிறான்
தயக்கம் இல்லாதவன் வெல்ல
முடியாது என்று சொல்லும் சொல்லை
மட்டும் கடினம் என்று கருதுகிறான்
என்னும் எண்ணம் நல்லதாக இருந்தால்
எமனும் உனக்கு அன்பானவனாகலாம்.......