காதல்தான்

அன்பே

ஆண் : ஆழ்கடல் மீது
அலைகள் கொண்டதும்
காதல்தான்!
பெண் : அதனை அடைய முடியாமல்
அலைகள் கொள்வதும்
ஊடல்தான்!!
ஆண் : அலைந்து திரிந்த போதும்
ஆழ்கடலை விட்டு
அலைகள் நீங்குமா?,


ஆண் : மதியவள் வளர்நது வரும் போது
வானம் கொண்டதும் காதல்தான்!
பெண் : மதியவள் மறையும் போது
தேடும் விழிகள் கொண்டதும்
ஊடல்தான்!!
ஆண் : ஊடல் கொண்ட போதும்
உள்ளம் அவளை விரும்பாமல்
இருக்க முடியுமா?,


ஆண் : தாகம் கொண்ட தாமரை
தண்ணீரில் இருப்பதும்
காதல்தான்!
பெண் : தாகம் கொண்ட போதும்
தண்ணீர் மேல் மோகம்
கொள்ளாமல் இருப்பதும்
ஊடல்தான்!!
ஆண் : ஊடல் வந்த போதும்
தண்ணீர் இன்றி தாமரை
உயிர் வாழுமா?,


ஆண் : மொட்டு விட்ட மலரை
முகர்ந்து பார்க்க
வண்டு வருவதும் காதல்தான்!
பெண் : வண்டு வரும் போது
மலர் தன்னை மூடிக் கொள்வதும்
ஊடல் தான்!!
ஆண் : மலர் தன்னை
மூடிக் கொண்டாலும் தேனினை
வண்டு வீணாக்குமா?,

ஆண் : மணம் பறிக்கும் பூவினை
மற்றவர் பறிக்காமல் இருக்க
முட்கள் கொண்டதும்
காதல்தான்!
பெண் : அதன் முகம் பார்க்க முடியாமல்
முட்கள் முடங்கி கிடப்பதும்
ஊடல்தான்!!
ஆண் : முகம் பார்க்க முடியாத போதும்
முதலில் கைகள் பறிக்க துடிப்பது
முட்களைத் தானே,

ஆண் : கூடி வாழும் கூட்டில் இருக்கும்
பறவை இறைத்தேடி செல்வதும்
காதல்தான்!
பெண் : இறைத்தேடி சிறகுகள் சென்றாலும்
இங்கு ஒரு மனம்
சிறகு இழந்து தவிப்பதும்
ஊடல்தான்!!
ஆண் : சிறகு இழந்த போதும்
சின்னஞ்ச் சிறு சிறகு அது
சிதைந்து போகுமா?,


ஆண் : நீல(ள)ம் கொண்ட வானத்தில்
நீந்தி விளையாட
வானவில் வருவதும் காதல்தான்!
பெண் : நீந்தி விளையாட வந்த போதும்
நெடுநேரம் நிற்காமல்
ஓடிப் போவதும் ஊடல்தான்!!
ஆண் : நெடுநேரம் வானவில்
நிற்காமல் போனாலும்
வாழும் நெஞ்சங்களில் அதன்
வண்ணம் கலைந்து போகுமா?,


ஆண் : சாலை ஒர மரங்கள்
மாலை நேரங்களில்
எங்கி பார்ப்பதும் காதல்தான்!
பெண் : ஏங்கி பார்த்த போதும்
ஏனோ மனம் மாறுவதும்
ஊடல்தான்!!
ஆண் : மனதை மாற்றிய போதும்
அதன் மயக்கம்
மறைந்து போகுமா?,


(இதில் ஒருதலை காதல்)

ஆண் : ஒற்றைப் பார்வையில்
ஒருமுறை சிக்க வைத்து
அவள்! அவனை தனிமையில்
சிரிக்க வைப்பதும் காதல்தான்!
பெண் : சிரிக்க வைத்த போதும்
அவனை இன்னும்
சிந்திக்க விடாமல் செய்வதும்
ஊடல்தான்!!
ஆண்: தேவை என்று அவளை
தேடிச் செல்வதும்
காதல்தான்!
பெண் : அவன் தேடி வந்தாலும்
இவள் தேவையில்லை என்று
ஓடிப் போவதும் ஊடல்தான்!!
ஆண் : ஓடிப் போன பின்னும்
அவளிள் உள்ளத்தை நேசிப்பதும்
காதல்தான்!
பெண் : நேசம் காட்டிய போதும்
அவனை உதறிவிட்டு
செல்வதும் ஊடல்தான்!!
ஆண் : உதறிவிட்டுச் சென்றாலும்
அவன் உயிர் இல்லையென்று
ஆகுமா?
இல்லை
இவன் உயிர் அவளிடம் இருப்பது
மறையுமா?,


(இதில் இருதலை காதல்)

பெண் : இமைகள் பார்த்து
இதயம் பூர்த்து
இன்று நாம் இணைந்ததும்
காதல்தான்!
ஆண் : இணைந்து நின்ற போதும்
இன்னும் "நீ" புரியாமல்
இருப்பதும் ஊடல்தான்!!
பெண் :என்னை புரியாமல் இருந்தாலும்
உண்மையை நான்
புரிந்து கொண்டதும் காதல்தான்!
ஆண் : "நான்" மறைந்து பார்க்கும்
வேளையிலும்
நம்மை மற்றவர்கள் பார்க்கும்
வேளையிலும்
தயங்கி நீ நடப்பதும் ஊடல்தான்!!
பெண் : மணமாகத போதும்
மற்றவர்கள் மத்தியில்
இருக்கும் போதும்
மனம் உன்னை மறக்காமல்
இருப்பதும் காதல்தான்!
ஆண் : நெருங்கி நான்
வரும் நேரங்களில்
ஒதுங்கி "நீ" போவதும் ஊடல்தான்!!
பெண் : ஒதுங்கி நான் போனாலும்
உன்னை நினைத்து
உருகி தவிப்பதும் காதல்தான்!
ஆண் : கண்கள் உன்னை
காண வரும் வேளைகளில்
"நீ" கண்ணுக்கு எட்டாமல்
காயப்படுத்துவதும் ஊடல்தான்!!
பெண் : காயப்படுத்திய காலங்களிலும்
"என் காதல்"
உண்மை இல்லாமல் போகுமா?
இல்லை
என் கழுத்து உனக்கு
சொந்தமில்லாமல் போகுமா?
என் மனதை
உனக்கு தந்த நாள்முதலே
"நீ" என் மணவாளன் ஆன போது!
உன்னை மறந்து வாழ்ந்தால்
அந்நாள்
எனக்கு இறந்த நாள் அல்லவா?♡♡♡!!!


(ஊடல் இன்றி உலகில்
உயிர் வாழ காதல்கள் இல்லை.
அதை உணராமல் போனால்
இதுவரை காதல் செய்ததில்
அர்த்தமில்லை....)

இப்படிக்கு
--- கவிதைகளின் காதலன்
பிரசாந்த் பிரியன்----

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Feb-18, 9:14 pm)
Tanglish : kathalthaan
பார்வை : 165

மேலே