பிறந்தநாள்

அமங்கலமாய் அணைக்கப்பட்ட மெழுகு
தீபங்கள்,
வெட்டி எறியப்பட்ட ரொட்டித்துடுகளில்
உயிர் இழந்த பெயரின்
எச்சங்களாய் எழுத்துக்கள் .
முகப்பூச்சான க்ரீம் கேக் ,
குப்பைக்காடாய் வெடித்து
பரந்த வண்ண காகித துண்டுகள் .
கைதட்டலும் , ஒப்பாரி ஓலம் போல்
ஆங்கில வாழ்த்து பாட்டுமாய்,.

நம் வாழ்நாளில் ஒரு வருடத்தை இழந்த
அந்த நாளில் ,
கொண்டாட்டம் என்று
ஏன் இப்படி ஒரு கொலைவெறி ஆட்டம் .

எழுதியவர் : (14-Feb-18, 7:12 pm)
Tanglish : piranthanaal
பார்வை : 54

மேலே