உமது பாடத்தில் உள்ள புறநானூற்றுப் பாடல்கள் இன்றும் என்றும் ஏற்புடையவையா அதனை ஆராய்ந்து விவரிக்க

புறநானூற்றுப் பாடல்கள் சங்க கால கவிதைகளுள் ஒன்றாகும். அவை காலத்தின் கண்ணாடியாக திகழ்ந்தாலும் அன்றும் இன்றும், எப்போதும் பொருந்தக்கூடியவையாகவே இவை உள்ளன. பொன்முடியார் மற்றும் கணியன் பூங்குன்றனார் எழுதிய கவிதைகளை நாம் விரிவாக ஆரய்ந்து அதில் உள்ளவற்றை உள்வாங்கி இன்புறுவோம்.

முதலில், புறநானூறு 312 பாடல். இப்பாடல் கடமையுணர்வின் இன்றியமையாமையைக் காட்டுகிறது. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே என்னும் வரி தாயின் கடமையை விளக்குகிறது. பெற்றெடுத்தல் ஒரு தாயின் தலையாய கடமையாகும். அடுத்த வரி தந்தையின் கடனை விவரிக்கிறது. சான்றோன் ஆக்க அவன் மகனை வளர்க்க நற்பண்புகள் குணாதிசயங்கள் அறிவு போன்றவற்றை ஊட்டி வளர்க்க வேண்டும். இதுவே பெற்றோர்களின் கடமையாகும். ஆனால், இன்றைய சூழலிலோ பெற்றெடுத்த குழ்ந்தையை வேறு யாரிடமாவது கொடுத்து வளர்க்கிறார்கள். குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலோ வீட்டு பணியாளரிடமோ கொடுக்கிறார்கள். இவ்வாறு இருந்தால் எப்படி அக்குழ்ந்தை சன்றோன் ஆகும். தீய குணங்களைப் பெற்று கூடா நட்பில் ஈடுபட்டு வாழ்வு கேள்வி குறியாகலாம். ஆகையால், பெற்றோர்களின் கடமையுணர்வை உணர்த்தும் வகையில் அமந்துள்ள வரிகள் என்றும் ஏற்புடையயனவே.

அடுத்த இரு வரிகள் கொல்லனின் கடமையையும் வேந்தறின் கடமையையும் விளக்குகிறது. தத்தம் பணிகளை சரிவர செய்ய வேண்டியது காலத்தின் கட்டயம். அநாவசியமான செயலில் ஈடுபடுவதோ அல்லது கடமையை புறக்கணிப்பதோ சரியான செயலல்ல. நாம் ஈடுபடும் செயல்களை ஆறப்போடாமல் சரிவர முடிக்க வேண்டும்.’அரசன் அவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்பதால் அரசன் எடுக்கும் முடிவுகளே மிகவும் முக்கியமானது. நாட்டின் அஸ்திவாரத்திலிருந்து அதன் வளர்ச்சி வரை அரசனின் சொல்லாலே முடிவு செய்யப்படுகிறது. சிங்கையில் நம் அரசாங்கம் தங்கள் திட்டங்களை ஆறப்போடாமல் அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விடுகின்றனர். இதனால் சிங்கை செழிப்புற்று திகழ்கிறது. ஆகையால், அரசனின் ஆட்சியே வளரும் மகனுக்கு துணையாக இருக்கிறது. இவ்வாறு இரு வரிகளின் பொருத்தத்தைக் கண்டுள்ளோம்.
இறுதியான இரண்டு வரிகள் நாட்டுப்பற்று மற்றும் வீரத்தைச் சித்தரிக்கிறது. சங்க காலங்களில் அதிகமாக காணப்பட்ட போர்களில் ஆண்மகன்கள் சென்று யானையை கொன்று வெற்றி வாகை சூடினர். அச்சமில்லாமல் நாட்டுக்காக போரில் ஈடுபட்டு தங்கள் வாழ்விற்கு அர்த்தம் சேர்த்தனர். அவ்வாறு இன்றும் நடக்கிறது. தேசப்பற்று நம் சமுதாயத்தினரிடம் இருக்க, சிங்கையில் தேசிய சேவை உள்ளது. இதில் வீரத்தையும் பற்றையும் வளர்த்து நாட்டுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மக்கள் ஆயத்தமாக இருக்கின்றனர். எவ்வளவு இன்னல்களை கண்டாலும் நாட்டை விட்டு வெளியேறாமல் நாடுக்காக தங்களை அர்ப்பணம் செய்துவிட்டார்கள். ஆகையால், இவ்வாறு இறுதி இரு வரிகளும் இன்றும் என்றும் ஏற்புடையதாக இருக்கிறது,

புறநானூற்றின் புகழ்பெற்ற பாடலை தற்போது காண உள்ளோம். அது உலகம் போற்றும் வரியுடன் தொடங்குகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரி ஒற்றுமையின் சிகரத்தைக் காட்டுகிறது. எல்லா ஊரும் என் ஊரே. அனைவரும் என் உறவினர்களே. இவ்வாறு என்றுமே இருக்க வேண்டும் என்பது மெய். பேராசையால் நடந்த உலகப் போர்கள், அன்பில்லாமல் நடக்கும் தாக்குதல்கள், இவையெல்லாம் எதனால் வந்தவை? சமத்துவம் இல்லாததால். மக்கள் தங்கள் இனம், மொழி, மதம், ஜாதி போன்றவற்றால் வேறுபாட்டை உண்டாக்கி கொள்கின்றனர். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் அந்தஸ்த்து பார்க்கின்றனர். இவ்வாறு இருந்தால், என்று ஒற்றுமை உண்டாகும்? ஆகையால், வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுணர்வுடன் செயல்பட்டு பணம் பொருள் ஆகியவற்றை பகிர்ந்து இன்புற வேண்டும். இவ்வாறு முதல் வரி என்றுமே ஏற்புடையதாக உள்ளது.
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன’. இவ்வரிகள் தன்வினைச் தன்னைச் சுடும் என்றும் அதிலிருந்து மீண்டு வருவது வினைகளின் அடிப்படையே ஆகும். ஆகையால், செய்யும் வினைகளை சரியாக சிந்தித்து செய்ய வேண்டும். நீயுட்டனின் எதிர்வினை தத்துவம் போல, இவ்வரி பொருந்த்துகிறது. ஒரு காரியத்தில் ஈடுபடும்போது பின் விளைவுகளை ஆராய்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால், நம் விளைவுகளின் ஆழத்தை அறிய மாட்டோம்.

‘சாதலும் புதுவே...’ என்ற வரிகள் சாவுதல் இயறகையானதுதான். இதனைக்கொண்டு வாழ்வை இனிதாயும் வாழாமல் வெறுத்தும் ஓடாமல் இருக்க வேண்டும். தற்போது, எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்கின்றனர். இதனால், விளைவுகளிலிருந்து தப்பிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஆகையால், இன்ப துன்பங்களை அனுபவித்து வாழ்க்கை நிரந்தரமல்ல என்று அறிந்து வாழ வேண்டும்.

அடுத்ததாக, வானத்தில் உருவாகும் மழைத் துளிகள் தங்கள் பாதைகளை தீர்மானிப்பதல்ல என்று கணியன் கூறுகிறார். அத்துளி இருக்கும் மலை, மேடு, ஆறு போன்றவற்றில் பட்டு எங்கோ செல்கிறது என்கிறார். ஆகையால், ஊழ்வினையே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்று இவ்வரிகள் உணர்த்துகின்றன. இதற்கு வலு சேர்க்கும் வகையில்
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”
என்று வள்ளுவ பெருந்தகை கூறுகிறார். ஊழை விட வலிமையானது எதுவுமில்லை என்ற பொருளினை இரு சான்றோர்களும் நமக்கு உணர்த்துகின்றன. இதனை புரிந்து நம் வாழ்வை இயல்பாக வாழ வேண்டும்.

எவ்வளவு அருமையான உயிராக இருந்தாலும் பெரிய ஆற்றில் செல்லும் தெப்பம் போல் செல்லத்தான் ஆகும். ஆகையால், வாழ்வைக் கண்டு அஞ்சாதே, அது நிரந்த்ரமல்ல என்கிறார். போக வேண்டும் என்றால் போய்தான் ஆக வேண்டும். இறுதியாக, பெரியோரை கண்டு வியக்காமலும், அதை விட தாழ்வானவர்களை இழிவாக காணாமலும் இருக்க வேண்டும் என்கிறார். கர்வம் கொண்டு செயல்படக் கூடாது என்கிறார். யாராக இருப்பினும் சம உரிமை மற்றும் மரியாதைகளை வழங்கி அவர்களை ஒன்றாக பார்க்க வேண்டும் என்கிறார். இவ்வாறு கவிதையை வரி வரியாக செதுக்கியுள்ளார் கணியன் அவர்கள்.

இரு பாடல்கலளும் செம்மையாக வாழ்வது எவ்வாறு எனப்தற்கு சான்றாகும். இன்றைய காலக்கட்டத்தில், அப்பா ‘டாஸ்மாக்’கிலும் அம்மா தொலைக்காட்சி நாடகம் பார்ப்பதிலும் பொழுது போக்காக கொண்டுள்ளனர். இவ்வாறு இருந்தால் அடுத்த தலைமுறை சூரியனும் தண்ணீரும் இல்லாத செடியாகத்தான் வளரும். ஆகையால், அவரவர் பணிகளை சரிவர செய்து கடமையுணர்வுடன் வாழ வேண்டும். வாழ்க்கை நிரந்தரமல்ல. அதுவே ஊழ்வினை என்று அறிந்து, வினைகளை சரியாக செய்து, அஞ்சாமல், களிப்பாகாமல் செம்மையான வாழ்வினை வாழ இப்பாடல்கள், இன்றும் என்றும் எப்போதுமே ஏற்புடையதாகத்தான் இருக்கும்.

எழுதியவர் : புனைந்தவர்: அ முஹம்மது மாத (15-Feb-18, 6:58 pm)
சேர்த்தது : மாதிஹ்2000
பார்வை : 157

மேலே