செக்க சிவந்த காதலி
நீல வண்ண சேலையும்
நீவி விட்ட கூந்தலும்
நீந்தி வந்தாவது என்னை காண் என்று சொல்கிறது
முழுநிலவு கண்களும்
முடிந்து வைத்த சிரிப்பும்
முழுமூச்சாக என்னை
தூங்க விடாமல் கொல்கிறது
பொட்டு வைத்த நெற்றியை மதம் தாண்டியும் என் மனம் ரசிக்கிறது
கட்டி வைத்த தாஜ்மஹால்
உயிர் கொண்டு
உன்னோடு வசிக்கிறது