காதல் தூது

அவள் கன்னக் குழியில் மயங்கி
கிடக்கும் இளங்காலைத் தென்றலே,
முகத்தில் முகிழ்ந்து தன்னிலை
மறந்து துயிலும் முழு நிலாவே,
இதழோரம் இடம் பிடித்த மகிழ்வில்
சிரித்து மகிழும் ரோஜா மலர்களே ,
என்னைக் கண்ட கலக்கத்தில் அவள்
விழிகளில் நின்று மருளும் மான்களே,
ஒவ்வொருவராய் உங்களை தூது விட்டேனே
என் காதலை அவளிடம் சொல்ல ,
நீங்கள் திரும்பி வர இஷ்டமின்றி
இவ்வாறு அங்கேயே தங்கி விட்டால்
என்நிலை என்னாவது பின்பு என் காதலை
யார் தான் அவளிடம் சொல்வது ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (17-Feb-18, 12:19 pm)
Tanglish : kaadhal thootu
பார்வை : 194

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே