அடர்ந்த காடும் அழகு

எனக்கென வாய்த்தது காட்டில்
அதிகாரி வேலை★
அடர்ந்த காட்டில் மரங்களும், மிருகங்களும் ஒரே மாதிரி இரும்பாக, இறுக்கமாக★🐯🦁
குறும்பாய் பழகவில்லை குரங்குகள் கூட🐒🐒
கரும்பாய் இனிக்கவில்லை காடுவாசம்★இருட்டிலே குருட்டு பார்வை பார்த்து கலங்கிய எனக்கு★
நெஞ்சில் கீறியதொரு மின்னல் கீற்று🌟
காட்டுக்குள்ளே பொறுக்க வந்தாள் சுள்ளி★
நாட்டுக்குள்ளே நல்லழகு கொண்ட கள்ளி★
கூட்டுக்குள்ளே கிடந்த என் மனதை
எடுத்துக்கொண்டாள் அள்ளி★
அது கூத்தாடியது துள்ளி துள்ளி★
கடுங்காடெனக்கு பூஞ்சோலை ஆனது🍁🍁
குயிலுச்சத்தம் இசையாய் இனித்தது★
கரடிக் கூந்தல் அழகாய் அலையாய்
மிதக்குது★
சந்தமில்லா சங்கீதமாயிருந்த நான்
புது வசந்தம் பூத்த மரமாகினேன்🌲🌳
அடர்ந்த காடும் அழகாக தோணுதே!
மிருகங்களும் மனிதமாய் பழகுதே🌷
தோழியாக, காதலியாக நீவந்த பின்னே🌷

எழுதியவர் : பாலமுருகன்பாபு (17-Feb-18, 12:33 pm)
பார்வை : 94

மேலே