முதல் காதல்
உனக்கென்று ஒருவள் உனக்காக ஒருவள்
உன் பசியை அவள் அறிவாள்
நீ உன்ன வேண்டும் என்று அவள் உண்ணாமல் இருப்பாள்
உன் உறக்கத்தை அவள் அறிவாள்
நீ உறங்க வேண்டும் என்று அவள் விசிறியாய் கிடப்பாள்
உன் பார்வைக்கே பதில் கொடுப்பாள்
உனக்காக காத்துகிடப்பாள்
எந்தச் சூழ்நிலையிலும் உன்னைப் பிரிய அவள் நினைத்ததில்லை
உன்னை விட பெரியதாக அவளுக்கு வேறா ஒன்றும் தோன்றியதுமில்லை......
முதல் காதல்
உன் அன்னையிடம் இருந்தே துவங்கும் ......