நிசப்த வெளியில்
உலகப் பாடுகள் ஏதும் தெரியாது
கலகக் காட்சிகள் பார்க்க கிடைக்காது
எங்கும் நிசப்தமே ஆட்சி செய்திடும்
தங்கும் அமைதியில் காலம் கடந்திடும்
பொய்யும் பொறாமையும் அறிந்தது இல்லை
நடிப்பும் வேடமும் தெரிந்தது இல்லை
ஊழல் காட்சிகள் நடந்தது இல்லை
தீவிர வாதமும் புரிந்தது இல்லை
அன்பை மட்டுமே பகிரத் தெரியும்
பாசம் மட்டுமே கண்ணில் தெரியும்
இன்பம் மட்டுமே நெஞ்சில் நிறையும்
விழிக்கும் நேரமே மெல்ல குறையும்
தீரா அமைதியில் நிலைத்தே இருந்தோம்
தீர்த்த நதியினில் திளைத்தே இருந்தோம்
ஆறாக் காயங்கள் ஏதும் இல்லையே
நிசப்த வெளியது தாயின் கருவறை!!!