மழலை

என் இமைக்கா இமைகள்
வழியே வலி
மறந்து விழி வழியும்
விழி நீரும் நின்
அழகில் மயங்கியதால் போலும்...!

என்னுள் வலி நூறு
இருந்தாலும் இவள்
கள்ளம் இலா சிரிப்பினில்
அது மறந்து நானும்
சிறு பிள்ளையென மாறினேன்...!

இவள் நான் நிறைமாதம்
சுமாக்க விடினும்
என் நெஞ்சம் சுமந்த எந்தன்
அன்னை இவளே....!

ஒருநூறு மொழி இவ்வுலகில்
இருந்தாலும் இவள்
சிந்தும் மழலை மொழியினில்
தவழ்ந்திடுகையில் நானும்
மழலையாயி மாறிப் போகிறேன்...!

எழுதியவர் : விஷ்ணு (18-Feb-18, 11:01 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : mazhalai
பார்வை : 169

மேலே