ஒமேகா

"ஒமேகா"

இளம்கலை இயற்பியல் முதலாமாண்டு முதல் நாள் வகுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. பள்ளி முடித்து கல்லூரி வந்தவர்களை, வெளியே சந்தித்த சீனியர் மாணவர்கள் நன்றாக மிரட்டி வைத்திருந்தனர்.

"பிசிக்ஸ் புரபசர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்... ஒரு கேள்வி கேட்டு பதில் வரலேனா அவ்வளவு தான்... அவரு திட்டர திட்டுக்கு அன்னைக்கே வீட்டுக்கு ஓடிப்போயிருவீங்க..", என்று என்ன என்னவோ சொல்லி வைத்திருந்தனர்..

முதல் நாள் கல்லூரி என்ற உற்சாகத்திலும், பிஸிக்ஸ் புரபசர் இன்னைக்கு என்ன கேப்பாறோ என்ற ஒரு படபடப்பிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர்..

ஆங்காங்கே ப்ளஸ் டூ வரை ஒன்றாக படித்த இரண்டு மூன்று பேர் மிக அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்தனர்..

அப்போது அங்கே ஒரு பட்டாம்பூச்சி வந்தது.. மிக மிக மென்மையாக அடி எடுத்து வைத்து, அழகாக எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே வந்த அந்தக் குயிலைக் கண்டதும், எல்லோருமே அமைதியாயினர்..

வந்ததவுடன் சில மாணவர்கள் "இது யாரு தெரியுமா.. நம்ம பிஸிக்ஸ் சாரோட பொண்ணுடா..", என பேசிக் கொண்டனர்..

அப்போது மெல்ல உள்ளே நுழைந்தார் பிஸிக்ஸ் சார்.. அவரது பெண்ணைப்பார்த்து புன்னகைத்தவாரே பிளாக் போர்டின் அருகில் சென்றார்..

எல்லோரும் கோரசாக "குட் மார்னிங் சார்", வைத்தனர்..

"குட்மார்னிங் ஸ்டூடன்ட்.. உங்களுக்கு என்னோட பொண்ண அறிமுகப்படுத்தறேன்.. உங்களோட சேர்ந்து தான் படிக்க போறா.."

"எனக்கு ரெண்டு பொண்ணுங்க..ஒரு பையன்.. ஒரு பொண்னு பேரு யுரேகா... அவ இப்ப தான் ப்ளஸ் டூ படிக்கறா..."

"இங்க வாம்மா.. என் பொண்ணு உங்ககிட்ட அவ பேரச் சொன்னாளா.."

"இல்ல சார்.."

"நீயே உன் பேரச் சொல்லுமா.."

"என் பேரு... "ஒமேகா"

என்ன ஒமேகாவா என எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருந்த போது ஒரு மாணவன் எழுந்து ஒரு சந்தேகம் கேட்டான்..

"சார்.. அப்படியே உங்க பையன் பேரையும் சொல்லிடுங்களே?"

"சொல்லிடவா.."

"சொல்லுங்க சார்"

"இன்பினிட்டி"

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 8:37 am)
பார்வை : 113

மேலே