அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 5

அன்று இரவு சிவாஸ் ரீகல் குப்பியுடன் மைக்கேல், மெர்சி, ஸ்கார்லெட் பொழுதை கழித்தனர். ஆனால் ஜொஹானோ மறுநாள் வான்கூவர் செல்ல ஆயத்தமாகிக்கொண்டு இருந்தான். மறுநாள் காலை ஏழரை மணிக்கு ஏர் கனடா விமானம், ஐந்தரை மணி நேர பயணம்.

விடியலில் மெர்சிக்கு ஒரு தகவல் அனுப்பினான் ஜொஹான். "நான் ஏழரை மணிக்கு ஏர் கனடா மூலமாக வருகிறேன், என்னை இரண்டு மணி அளவில் வந்து வான்கூவர் விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துக்கொள்" என்பது தான் அந்த செய்தி.

காலை முதல் முந்தைய நாள் குடித்த அந்த பணம் அவர்களுக்கு தலை வலி ஏற்படுத்தி இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு தான் மெர்சி படுக்கையில் இருந்து எழுந்தாள். இரவில் அவிழ்த்துப்போட்டிருந்த மேலாடைகளை எடுத்து போட்டுக்கொண்டு தேநீர் அருந்தியவாறே தனது கைபேசியில் வந்திருந்த குறுந்தகவலை பார்த்தாள். நேரம் பன்னிரெண்டே கால். இன்னும் ஒன்றேமுக்கால் மணி நேரம் தான் இருந்தது.

ஸ்கார்லெட்டும் மைக்கேலும் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. இதிலும் மைக்கேல் உடல் கட்டிலில் தலை கீழேயும் தலை கீழாக தூங்கிக்கொண்டிருந்தான்.

அவனை பார்த்து சிரித்துக்கொண்டே தான் மட்டும் செல்வதாக முடிவெடுத்துக்கொண்டாள் மெர்சி.

குளித்துவிட்டு காரை வான்கூவர் விமான நிலையம் நோக்கி செலுத்தினாள் மெர்சி.

விமான நிலையம் வந்து சேரும்போது ஜொஹான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்திருந்தான்.

"ஹாய் மெர்சி. மிஸ்ட் யு எ லாட்" என்றபடி மெர்சியை கட்டி அணைத்து உதட்டில் முத்தமிட்டான் ஜொஹான்.

"மிஸ்ட் யு டூ ஜொஹான்" என்றபடி முத்தத்தை ஏற்றுக்கொண்டாள் மெர்சி.

"எங்கே, அவர்கள் இருவரும்" என்று கேட்ட ஜொஹானுக்கு அவர்கள் நேற்று குடித்த போதையில் இருந்து மீளவே இல்லை, நானும் இது தான் சந்தர்ப்பம், உன்னோடு தனிமையில் இருக்கலாம் என்று அவர்களை எழுப்பி கூட்டி வராமல் தனியாக வந்தேன், ஏன்? அவர்களோடு தான் நான் வந்திருக்க வேண்டுமா?" என்றாள் மெர்சி.

"அப்படி இல்லை, உன்னோடு தனிமையில் இருப்பது தான் எனது சுகம் மெர்சி, இருந்தாலும் அவர்களோடு வருவாய் என நினைத்தேன், அதனால்தான் கேட்டேன்" என்றான் ஜொஹான்.

"பரவாயில்லை, அது சரி, நீ புத்தாண்டிற்கு முன் வரமாட்டாய் என்று எண்ணினேன், ஆனால் சொன்னது போல வந்துவிட்டாய்" என்றாள் மெர்சி.

"ஆமாம், உன்னை பார்க்காமல் என்னால் இவ்வளவு நாள் இருக்க முடிந்ததே பெரிய விஷயம், புத்தாண்டிற்கு உன்னோடு இருக்கவில்லை என்றாள் எனக்கு தலையே வெடித்துவிடும்" என்றான் ஜொஹான்.

"நீ வேறு எதற்கோ அடி போடுவதாக தெரிகிறது ஜொஹான், நாட்டி பாய்" என்றாள் மெர்சி சிரித்துக்கொண்டே.

"ஏய், அப்படி எல்லாம் இல்லை, இருந்தாலும் நான் எதிர்பார்த்தால் என்ன தவறு? நீ என்ன சம்மதித்து எதிர்பார்ப்பதை தாராமலா போய்விடுவாய்?" என்று பதிலுக்கு சிரித்தபடியே சொன்னான் ஜொஹான்.

"தராமல் போனால் தான் விடுவாயா? உன் முத்தத்தின் வேகத்திலேயே புரிந்தது ஜொஹான், நீ மிகவும் ஏங்கி இருக்கிறாய் என்று" என்றபடி காரை நோக்கி நடந்தாள் மெர்சி.

பின்னாலேயே ஜொஹானும் நடந்தான்.

"காரை அடைந்ததும், "மெர்சி, நாம் நேராக வெஸ்ட்மின்ஸ்டர் போய் அலெக்ஸை பார்க்கலாமா?" என்றான் ஜொஹான்.

"ஏய், ஜொஹான், இது அநியாயத்தின் உச்சம், நான் என் காதலனை பார்க்க காரை எடுத்து வந்திருக்கிறேன், ஒரு முத்தத்தை மட்டும் கொடுத்துவிட்டு உயிர் தோழனை பார்க்க என்னை கட்டாயப்படுத்துகிறாய், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், நீ அவனை பார்த்ததும் என்னை கண்டுகொள்ள மாட்டாய் என்பது எனக்கு தெரியும், முதலில் ஏக்கம் தனித்து தாகம் தனித்து பிறகு போகலாம்" என்றபடி காரை வேகமாக சர்ரே 180 சாலை நோக்கி செலுத்தினாள் மெர்சி.

"மெர்சி, நான் உனது கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன், அதற்காக இவ்வளவு வேகமாக வண்டியை செலுத்த வேண்டுமா" என்றான் ஜொஹான்.

"சரி சரி, பயப்படாதாம் உனக்கு எனது ஓட்டும் திறனில் நம்பிக்கை எப்போது தான் வரப்போகிறதோ?" என்றாள் மெர்சி.

சிரித்தபடியே ஜொஹான் பயணித்தாலும் அவன் மனம் என்னவோ அலெக்ஸை பற்றி தான் நினைத்துக்கொண்டிருந்தது.

அவன் நினைப்பதிலும் நியாயம் இருக்கிறது. அலெக்ஸ் ஜொஹானின் உயிர் தோழன், ஜொஹான் மருத்துவராக பணிபுரியும் அதே மருத்துவமனையின் முதன்மை பரிசோதனை கூட அதிகாரியாக இருந்தான். இளம் வயதில் தாயை இழந்து தந்தை வளர்ப்பில் வளர்ந்த அலெக்ஸ் மற்றும் அவனது தங்கை டெய்சி இருவரும் படிப்பில் மிக சுட்டி தான், அலெக்சின் தந்தையும் ஒரு சிறந்த தந்தையாக இருந்தார், கைரேகை நிபுணராக பணியாற்றிய அவர் தனது பிள்ளைகளை நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு தீ விபத்தில் தனது பார்வையை இழந்து கைகளையும் இழந்து தானாக நகரக்கூட முடியாமல்
துணை தேடும் பாரமாக மாறி விட்டார். தங்கையையும் தந்தையையும் நல்லபடியாக பார்த்துக்கொண்டிருந்த அலெக்சின் மனதை இன்னும் காயப்படுத்த வந்தது அவனது தங்கைக்கு சிறுநீரக புற்றுநோய். மிகவும் சிரமப்பட்டு என்னென்னவோ மருத்துவம் செய்தும் புற்றுநோய் இறுதி நிலையை அடைந்தது. உடைந்தே போய்விட்டான் அலெக்ஸ். வேலையில் கூட கவனம் செலுத்த முடியாமல் தடுமாற்றம் அவன் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாக தனது தங்கைக்கு புற்றுநோய் முற்றி அவள் இறக்கும் தருவாயில் இருப்பதாக சொல்லி சென்றவன் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை, என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை. மன இறுக்கம் மற்றும் கவலையால் சீர்குலைந்து இருந்த அலெக்ஸை பற்றி மிகவும் கவலை அடைந்தான் ஜொஹான்.

கார் அவர்களது இல்லத்தை அடைந்தது.

ஸ்கார்லெட்டும் மெர்சியும் ஒரே வீட்டிலும், மைக்கேல் மற்றும் ஜொஹான் ஒரே வீட்டிலும் இருந்தனர். ஸ்கார்லெட்டும் மைக்கேலும் ஜொஹான் பணிபுரியும் அதே மருத்துவமனையில் நிதித்துறையில் பணியாற்றி வந்தனர். மெர்சி, ஒரு பிரபல தொலைகாட்சி நிலையத்தில் ஊர் ஊராக சென்று அந்த ஊரின் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரு தொலைகாட்சி நிகழிச்சி தொகுப்பாளர்.

ஸ்கார்லெட்டும் மைக்கேலும் இன்னும் எழுந்திருக்கவில்லை, அவர்களை பார்த்த மாத்திரத்தில் ஜொஹான் "இவர்கள் இப்படி தன்னிலை மறந்து இருக்கும் அளவுக்கு குடித்திருக்கிறார்களா?" என்றான்.

"ஆமாம், நமக்கும் வசதி தான், வா எனது வீட்டிற்கு செல்லலாம்" என்றபடி ஜொஹானை கூட்டிக்கொண்டு அவளது வீட்டிற்கு சென்றாள் மெர்சி.

கதவுகள் தாழிடப்பட்டன.....

வெகுநேரத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. அப்போது தான் மைக்கேலும் ஸ்கார்லெட்டும் எழுந்து பல் துலக்கிக்கொண்டிருந்தனர்.

"மைக்கேல், நீ எங்களோடு வெஸ்ட்மின்ஸ்டர் வருகிறாயா, நாங்கள் அலெக்ஸ் வீட்டிற்கு செல்வதாக இருக்கிறோம்" என்றபடியே உள்ளே வந்தான் ஜொஹான்.

"இல்லை, நானும் ஸ்கார்லெட்டும் இப்போது தான் எழுந்தோம், நீங்கள் போய் வாருங்கள்" என்றான் மைக்கேல்.

"ஏய் ஜொஹான், ஆமாம், அவன் சொல்வது சரி தான், நாங்கள் இங்கேயே இருக்கிறோம், நீ சென்று வா" என்றாள் ஸ்கார்லெட்.

அரை மணி நேரத்தில் ஒரு தேநீரை அருந்திவிட்டு புறப்பட்டு அலெக்சின் வீட்டை நோக்கி பயணித்தனர் ஜொஹானும் மெர்சியும்.

திகில் தொடரும்........

பகுதி 5 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (18-Feb-18, 10:55 am)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 247

மேலே