ஒத்தையில போறவளே

ஒத்தையடி பாதையிலே ஒத்தையில போறவளே
ஒத்தையா வானத்துல பயந்தே நானிருக்கேன்
ஒங்கதைய சொல்லிடடி ராப்பொழுதும் கேட்டிருக்கேன்
தங்க நிரந்தழகி எம்பேச்சக் கேட்டுடடி

நிலாத் தங்கச்சியே நீயாச்சும் எங்கச்சியே
இருந்தா போதுமடி மச்சானக் காணலடி
வாரேனு சொன்னவுக கனவிலும் வாரலையே
எங்கத்தான் போனாகளோ சேதியேதும் தெரியலையே

கலங்காதே அக்காச்சி கண்ணீரும் உப்பாச்சு
விளக்கமா சொல்லுவாக காணாத காரணத்த‌
சீக்கிரம் வந்துத்தான் உங்கூட பேசுவாக‌
காட்டுப்பக்கம் சுத்தாத மோகினி புடிச்சிக்கிறும்

உன் ஆறதலு வார்த்தைகளுக்கு சந்தோசம்
அவை மாறுதலு எனக்குள்ளே கொடுக்கட்டும்
வந்தாச்சு உங்கூட விளையாட நட்சத்திரம்
நான்மட்டும் தான் இங்கே விசித்திரம்

கலங்காதே கண்மணி நீயாவாய் மின்மினி
உனக்காக எதிர்காலம் வெளிச்சமா இருக்குமடி
உனைத்தாங்க ஓரிதயம் விரைந்தே வருகுதடி
உன்னைக் காதலிக்கும் வாழ்வெல்லாம் உருகியடி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (18-Feb-18, 1:20 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 98

மேலே