காதலிக்க வேண்டுமா நண்பா

​​Emoji பாஷை கற்றுப் பேசு
நண்பர் கூட்டத்தில் பொய் சொல்லப் பழகு
காதலியின் callலுக்காக காத்திருப்பின் அழகை அனுபவிக்க பழகு

அவள் ​​பேசும் போது நிஜத்தை மறந்து
மூளையை கழற்றி roomல் பூட்டிவிட்டு செவி கொடு​​

அவளின் குரல் இசையாக வேண்டும்
அவளின் மூச்சு Oxygenஆக வேண்டும்

அவளுடன் சிரி
அவள் கரைச்சலுக்கு நீயும் கண்ணீர் சிந்து
இரவையும், தூக்கத்தையும் அவளுக்கென தானம் செய்

​காதலியின் அழகை பாராட்டாது இருக்காதே
கெஞ்சிக் கேட்டாலும் உண்மையய் சொல்லி விடாதே
சிறு பூசலும் சுனாமியாய் மாறும்

​சில நேரத்தில் நீயே அவளின் ஒரே நண்பன்
பல நேரத்தில் நீயே அவளின் முதல் எதிரி

​அவளின் தவறுக்கும், உன் தவறுக்கும்
மன்னிப்பு கேட்க நீயே முந்த வேண்டும்

​ ​Einstein காலத்து விடுகதை அவள்
தயவு செய்து பெண்ணை புரிய முயற்சிக்காதே

வெட்கம், மானம், ரோசம்,​ அணை​த்தையும் வீட்டில் புதைத்துவிட்டு​ ​
​அவளை bikeகில் ஏற்று

அவளின் மேனி வருட ஏங்காதே
காதலில் காமத்தை புகுத்தாதே
முத்தம் முத்ததுடன் முடியவேண்டும்

​புகைப்பதை மற
நண்பர்களை துற
குடிப்பதை நிறுத்து
இருந்து நா அடங்காவிட்டால்
Beer மட்டும் என சத்தியம் செய்து குடி
குடித்துவிட்டு போதையில் உளறி மாட்டிக் கொள்ளாதே

Facebookல் Single என ​​Status​ஐ ​மாற்றாதே
Instagramல் தோழியர் photoவுக்கு மறந்தும் like செய்யாதே
Whatsppல் கடலை போட்டு மாட்டிக் கொண்டால் சமாளிகாதே

அவளின் சிறு சிறு அறிகுறிகளை புரிந்து பேசு
நண்பர்கள் முன் அவளை ஓட்டாதே

சின்ன சின்ன சண்டையில் கிடைக்கும் இடைவேளையே...
இருவரின் நெருக்கத்தை மேலும் கூட்டும்

இப்படிப்பட்ட பெண்ணே
உன்னை சிரிக்க வைத்து துன்பங்களை நொடியில் மறக்கச் செய்வாள்
தன் மடி மீது தூங்கச் செய்து உன் கண்ணீரை அவள் விழியால் துடைப்பாள்​ ​
உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாத வெங்காயம் போலத்தான் காதலியும் அவள் தரும் இம்சைகளும்
கடைசியில் ஒன்றும் இருக்காது நண்பா ......

சும்மா காதலிச்சு தான் பாப்போமே ​..

எழுதியவர் : கண்மணி (18-Feb-18, 1:10 pm)
பார்வை : 421

மேலே