அம்மா அறிவேன் நான்

என் பற்றுதலை வெட்டிவிடவே உன் பொய் கோபம்..!!

உன் மனம்-குணம்
நானறிவேன்..!!
எனக்கென்று பந்தம் வந்தால் பறந்துவிடுவேன்
பருந்தாக
பாசமகளே-உன்
பிரிவையும் சகித்து..!!
பக்கத்தில் பார்த்து பேசுவது இன்னும் சொர்ப(சில) நாட்களே என்ற
பாசத்தில்தான்
பேச வந்தேன்..!

வேளைபளு வதைக்கிறது உன்னை..!!
அறிவேன் உன் கடமைகளை..!
அறிவேன் உன்
கோபங்களை..!
அறிவேன் உன்
அறிவுரைகளை..!
அறிவேன் உன்
மன எண்ணங்களை..!!


உன் எண்ணம்-செயல் அனைத்தும் சரியே..!!

பக்கத்தில் இருக்கும்போது பற்றறுத்து பேசிவிட்டு நான்
பறந்து சென்றதும்
பற்று நினைத்து வருந்தாதே..!!

அன்னையின்
அடிப்படை குணமே
அது தான்
அறிவேன்
அதனையும்...!!

உன் மனம் நான்றிவேன்..!!!

என்றும் உன் ஆசியோடு
நான் தொடர்வேன்
என் பயணத்தை..!!
உன் மகள்
உன் நினைவுடன்..!!
உன் ஆசியுடன்..!!
நீ வளம் நலம் பெற்று
மகிழ்வுடன் வாழ
என் வாழ்த்துக்கள்..!!

தேர்வு செய்
தெளிவான மனதுடன்..!!



உன் மகிழ்ச்சி..!
உன் விருப்பம்..!
உன் வாழ்க்கை..!
உன் தேர்வு..!

இம்மனிதர்களே வேண்டும்
இவர்கள் வேண்டாம் என
தேர்ந்தெடுக்கும் உரிமை
உன்னை சார்ந்த்து..!!

இனியும் உன்னை தொல்லை செய்ய மனமில்லை..!!



உன் இஷ்டம்..!!

எழுதியவர் : பகவதி லட்சுமி (19-Feb-18, 11:02 am)
Tanglish : amma ariven naan
பார்வை : 338

மேலே