அரசியலும் அடிமைகளும்

எம் ஜி ஆர்

வாரி வாரி வழங்குவார்

கயவர்களை களை எடுப்பார்
தம் சொத்துக்கள் அனைத்தையும்
தானமாய் தந்தருள்வார்

கதைக்கும்
நிஜத்திற்கும்
வேறுபாடு தெரியாத
நம் முன்னோர்களின்
மூட தனமே

இன்று

தர்மாக்கோல் கொண்டு
ஆற்றைமூடவும்

சாய கழிவினால்
ஆறுகளில் ஏற்பட்ட
நுரை
குளிக்கும்
சோப்பு நுரை என்றும்

கண்டு பிடிக்கும்
விஞ்ஞாணிகளையும்

கம்ப இராமயணத்தை
எழுதியது சேக்கிழார்
என்று சொல்லும் மேதாவிகளையும்
தந்து
தமிழ்நாட்டை
அடகு வைத்து நின்றது

இன்னும் சில அடிமைகளால்

ஜாதி தலைவனையும்
மத தலைவனையும்
இன தலைவனையும்
உருவாக்கி
மனிதர்களை
ஓட்டு வங்கிகளாய் மாற்றியது

படிப்பறிவற்ற
நம் முன்னோர்களின்
அடிமை ரத்தமே
நமக்குள் ஓடுகிறது என்பதை
இப்போதும் நிரூபித்து கொண்டிருக்கும் நாம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு
வரவேண்டும்
கமல் வந்து நம்மை
காப்பாற்ற வேண்டும்

தீபா வந்துதான்
நம்மை கரை சேர்க்க வேண்டும்

இப்படியே
கண்டவர்களை எல்லாம்
தலைவனாக்கி
நாமும் அடிமைகளாய்
நம் சந்ததிகளையும்
அடிமையாய் மாற்றி
நிற்க வைத்த
பெருமையும்
பாவமும் நம்மையே சேரும்


ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (19-Feb-18, 12:24 pm)
பார்வை : 79

மேலே