மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 16

மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி -௧௬

இருவருடைய பார்வையும் அனலும் குளிர்ச்சியும் ஒன்றாய் கலந்த காற்று இரு செவுளிலும் ஓங்கி அடிப்பது போல இருந்தது...
பஸ் முழுவதும் தன்னையே ஒருமாதிரியாய் பார்ப்பது போல சங்கடமாக உணர்ந்தான் கார்த்திக்..
நீ வீட்டிக்கு வா..உனக்கு இருக்கு,இன்னைக்கு அப்பா கிட்ட மாட்டிவிடுறேன் பாரு என்று சொல்வது போல் இருந்தது சுபாவின் பார்வை..
மாலதியை பார்த்தான் ..
அவள் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகள் அவனை யூகிக்க முடியாமல் தடுமாற வைத்தது...
காதல் என்று அவளுக்குள் ஊர்ஜிதமாகாத நிலையில்,அதுவும் கார்த்திக்கின் தங்கை முன்னால் இருக்கும் போது இதை பற்றி அவளால் என்ன சொல்லிருக்க முடியும்...
இறங்குவதற்கு முன்னால் இருந்த மூன்று நிமிடங்கள் நிசப்தமாய் உருண்டு சென்றது..
முதலில் சுபாவும் மாலதியும் பேருந்தை விட்டு இறக்கினர்..பின்னாடியே கார்த்திக்கும் இறங்கினான்..

ஓகே நான் வரேன் பார்ப்போம் என சுபாவிடம் சொல்லிவிட்டு கார்த்திக்கிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடந்தாள் மாலதி..
அவளையே பார்த்து கொண்டிருந்த கார்த்திகை முதுகில் தட்டினால் சுபா..
டேய் அண்ணா என்னடா நடக்குது...நான் என்னமோ உனக்கு அந்த அக்காவை தெரியாது அப்படினு நினைச்சு இன்ட்ரோ கொடுத்தேன் ..அத விடு அதுக்கு நீ என்னமோ ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரில ரியாக்ட் பண்ணுன ...இப்போ என்னடானா புக்ல எல்லா பேஜ்லயும் நேம் எழுதி வைச்சு இருக்க ...
அவங்க என்னடானா உன்னை கண்டுக்க கூட மாட்டேங்குறாங்க ...
உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலை என்றாள் சுபா..

ஏற்கனவே சரியான டென்ஷன்ல இருக்கேன் நீ வேற எதையாச்சு சொல்லி என்னிடம் வாங்கி கட்டிக்காத...கொஞ்ச நேரம் சும்மா வரியா என்று கடிந்து கொண்டான் கார்த்திக்..
அவன் எண்ணமெல்லாம் இரண்டு நாட்களாய் அவனிடம் அவள் சரியாக பேசுவதும் இல்லை..முகத்தில் பழைய மாதிரி ரியாக்ஷன் ஏதும் இல்லை ...ஒருவேளை லவ் பண்ணுறேன் னு சொன்னதால இப்படி பண்ணுறாளா இல்லை சுபா முன்னாடி அவ நேம் ஆஹ் மிஸ்யூஸ் பண்ணுனதால் இப்படி நடந்துக்கிறாள்னு ஒன்னும் புரியலையே என்று யோசித்தபடி நடந்தான் ...

வீட்டிற்குள் வந்து டிவி ஆஹ் ஆன் செய்தான்...ஷாம் நடித்த இயற்கை படம் ஓடிக்கொண்டிருந்தது..
காதல் வந்தால் சொல்லி அனுப்பு,உயிரோடு இருந்தால் வருகிறேன்...
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்.
சுட்ட மணலுலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி
என பாடல் ஒலிக்க மனம் இன்னும் இறுக்கமானது...

புத்தகத்தை எடுத்து புரட்டி பார்த்தான் அதிலும் மனம் ஒன்றவில்லை ..
மனசெல்லாம் காதலின் வலி அவனுக்குள் நெருஞ்சி முள் போல அவளை போலவே மௌனமாய் குத்தி குத்தி கண்ணீரை விழி படலம் முழுக்க நிறைத்தது..
காதலிப்பதால் ஏற்படும் வலியை விட காதலிக்க படாததால் ஏற்படும் வலி இன்னும் கொடுமையானது...
எவ்வளவு நாள்தான் இப்படி நம் மனசுக்குள்ளயே போட்டு அடைகாத்து வைத்திருக்க இனியும் பொறுக்க கூடாது ..அடுத்த முறை அவளை பார்த்தால் நேரிடையாகவே கேட்டு விட வேண்டும்..
இருக்கு இல்லனா இல்லை இதுல கண்டிப்பாக ஒரு பதில் சொல்லித்தானே ஆகணும்..
இருக்கு என்று சொன்னால் அத விட சந்தோஷம் வாழ்க்கையில் எதுவும் இல்லை ..ஆனால் ஒருவேளை இல்லை என்று சொல்லி விட்டால் என்ன பண்ணுறது..
அதற்கு அப்புறம் என்ன செய்வது என்று கற்பனையாக கூட அவனால் நினைத்து பார்க்க இயலவில்லை...

இரண்டு நாள் போயிருந்தது ..அவளை காலை நேர பேருந்தில் பார்த்தான்.ஆனால் அவளருகே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் இருந்தது ....பசங்களை யாரும் படிக்கட்டு முன்னால் வழியாக ஏற அனுமதிக்கவில்லை...சில நாள்களுக்கு முன்பு வேறொரு பஸ்ஸில் ஒரு பையன் ஒரு பொண்ணுக்கு பஸ்ல வைச்சு லவ் லெட்டர் கொடுக்க,அந்த பொண்ணு கத்தி கூப்பாடு போட்டுருச்சு ..அந்த பையனுக்கு பக்கத்துல நின்ன சீனியர் பசங்களும் சேர்ந்து அடிச்சு கீழ இறக்கி விட்டுட்டாங்க ...அதனால முன்னாடி மாதிரி பொண்ணுங்க பக்கத்துல யாரும் மோர்னிங் டைம்ல நிற்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்த்தது ..
சரி ஈவினிங் ஆச்சு பார்க்கலாம் என்றால்,அவள் எப்போதும் வர பஸ்ஸிற்கு வருவதில்லை..என்ன பண்ணுறது என்றும் தெரியவில்லை ....
ஒரு நாள் பர்ஹானாவிடம் கேட்டான் அவளை பார்க்க முடிவதில்லை ஏன் என்று...
மாலதியை ஈவினிங் டியூஷன் போற.இன்னும் ஒரு மாசத்துல எக்ஸாம் வருத்துல அதான் என்று காரணத்தை சொன்னாள்.....
இப்படியே சில வாரங்கள் ஓடியது ...அவள் விலகி நிற்பது அவனுக்குள் இன்னும் அதிகமாய் அவளை நேசிக்க வைத்தது .

+1 தேர்வின் கடைசி நாள்,.
தேர்வுகளோடு சேர்ந்து இதுநாள் வரையிலும் உறவாடிய வகுப்பறையும் அவனிடம் இருந்து ஓய்வு பெற்று கொண்டது.
புத்தக சுமைகள் எதுவுமின்றி பள்ளிக்கூடத்தை விட்டு தனியாய் பேருந்து நிலையத்தை நோக்கி மனச் சுமைகளோடு நடந்து போய்க்கொண்டு இருந்தான்..
போகும் வழியெல்லாம் எதிர்பாராத விதமாய் எதாவது ஒரு திருப்பத்தில் அவளை எதிரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டிருந்தான்..
அவள் அடிக்கடி நிற்கும் இடங்கள் வெறுமையை விலைக்கு வாங்கி அவனுக்கு பரிசளித்து கொண்டிருந்தது..
அவனுக்கான பேருந்தும் அவனை இருமுறை கடந்து போய் விட்டது.
கடைசியாய் அவளோடு சேர்ந்து பயணிக்க மனசு ஏங்கியது அவனுக்கு மட்டுமே தெரியும் ....இனி இரண்டு மாதத்திற்க்கு அவளை பார்க்கவே முடியாது என்ற எண்ணம் கார்த்திக்குள் வலுப்பெற ஆரம்பித்ததால்,இந்த சிறிய காத்திருப்பு சுகமாகவே இருந்தது.
மதியம் அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க ஆரமித்தவன் சாயந்திரம் நன்கு மணிவரை அவளை காணவில்லை என்றது அவனுக்குள் ஏமாற்றமாய் இருந்தது..
ஒருவேளை முன்னாடியே பஸ்ஸில் ஏறி போயிருப்பாளோ என எண்ணினான்..
நாம்தான் தேர்வு எழுதி முடித்ததும் இங்கு வந்துவிட்டோமே நம்மளை மீறி அவள் வேறு பஸ்ஸில் சென்றிருக்க வாய்ப்பில்லை என மனசு உறுதியாக சொன்னதால் காத்திருப்பதை கை விட்டு செல்ல அவனால் முடியவில்லை....

அதோ வருகிறாள்..
இதுவரை உள்ளுக்குள் சோர்ந்து கிடந்த மனசு அவளை பார்த்ததும் சந்தோசத்தில் வானுக்கும் பூமிக்கும் இடையே துள்ளி குதித்தது ..அருகில் அவள் வர வர கார்த்திக்கின் கையும் காலும் ஒன்றும் ஓடவில்லை ...அதுவும் ரொம்ப நாள் கழித்து அவள் அருகில் பயணம் செய்ய போகிறோம் என்ற எண்ணமே அவனை இன்னும் உணர்ச்சிவச பட வைத்திருந்தது..

அவள் முதலில் ஏறினாள்..பஸ்சின் முன்பகுதியில் நின்றாள் ..கார்த்திக் பின்னால் ஏறி பஸ்சின் நடுப்புறத்தில் வந்து நின்றான்..
அவள் முகத்தை தவிர வேறெதுவும் அவனை அலைபாய செய்யவில்லை.
அவளை தவிர வேற எதுவும் அவன் கண்களுக்கு தெரியவுமில்லை..
கார்த்திக் பார்ப்பது அவளுக்கும் தெரிந்தது.
அடிக்கடி அவனை திரும்பி பார்த்து கொண்டாள்.
அவள் அருகில் செல்ல தயக்கமாய் இருந்தது அவனுக்குள் ..
இன்னும் இந்த பயணம் கொஞ்சம் நேரம்தான் இனி அவளை இரண்டு மாதத்திற்கு பார்க்க முடியாது ..ஆனாலும் இவ்ளோ நாளாய் அவள் அவனிடம் ஏற்படுத்தி இருந்த இடைவெளி அவனுக்குள் அவளை நோக்கி நகர விடாமல் தடுத்தது..
பேருந்தில் நிற்பதற்க்கு ஏதுவாய் கம்பியை பிடித்து இருந்தான்...
தீடிரென மாலதி அவனை நோக்கி மெதுவாய் நடந்து வந்தாள்..அவனுக்குள் பயமாகவும் சந்தோசமாகவும் ஒன்றாய் வந்து சென்றது..அருகில் வந்தவள் கார்த்திக்கின் விரல்கள் பற்றி இருந்த கம்பியை அவளும் பற்றினாள்..
மெல்லமாய் அவளது விரல்கள் அவனருகே நகர்ந்து வந்தது..
அவனின் விரல்களை அவளின் விரல் தீண்டியது..
அவனுக்கோ மின்சார வேலியின் மீது அமர்ந்த பறவையை போல நொடியில் பஸ்பமாய் போயிருந்தான்.
அவன் கைகள் அனிச்சையாக கம்பியிலிருந்து பின்வாங்கி கொண்டது.அவளின் முகம் அவனுக்கு எதிராக திரும்பி இருந்தது.அவள் விரல்கள் ஒருவேளை தெரியாமல் பட்டிருக்கும் என எண்ணினான்..

மீண்டும் தன் கைகளை அதே கம்பியில் வைத்தான்..
அவனுக்குள் ஏற்பட்ட தடுமாற்றம் சீரடைந்து கொண்டிருந்தது.
மீண்டும் கார்த்திக்கின் விரல்களை அவளின் விரல்கள் பிடித்தது.
அவளை பார்த்தான் இப்போது அவளின் முகம் வெக்கத்தில் சிவந்து இருந்தது.. அவள் விரல்களின் பரிசத்தில் கார்த்திக்கின் காதல் உருகி கொண்டிருந்தது..
கார்த்திக்கின் நிறுத்தம் வந்த பின்னும் இறங்க மனமில்லை அவனுக்கு ..அவளின் விரல்களை உதறி தள்ளி விட்டு எப்படி பிரிய என திகைத்து நிற்க,அடுத்த ஸ்டாப்பில் அவளின் நிறுத்தம் வந்ததும் விரல்கள் மெதுவாக பிரிந்து நகர்ந்து சென்றது..
இறங்கியவள் கடைசியாய் ஒருமுறை திரும்பி அவளுக்கே உரித்தான மேனரிசத்தில் மௌனமாய் எரியும் அமிலத்தை விழிகள் மூலம் கார்த்திக்கின் இதயத்தில் வீசி விட்டு போனாள்..
மாலதி அவன் கண்ணிலிருந்து மறையும் வரை அமிலத்தின் வலியை உணராமல் மறத்து போயிருந்தான்..
இப்போதுதான் இதயத்தின் வால்வுகள் எரிய ஆரம்பித்திருந்தது..

காதலின் மூன்றாம் அத்தியாயம் காதலை தருமா இல்லை காயத்தை தருமா..

அது அதுக்கும் மேல....

எழுதியவர் : சையது சேக் (19-Feb-18, 6:23 pm)
பார்வை : 186

மேலே