நான்

#நான்
நேரம் காலை 11.30 ஆனது "நான் இன்னும் எனது கட்டிலை விட்டு எழுந்த பாடில்லை", எனக்காக வைத்த காப்பி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கலவதியாகிவிட்டது... என்னை எழுப்பிக்கொண்டே இருந்த எனது மொபைல், எனது அப்பா இருவரும் எங்கே என்றே தெரியவில்லை..நான் எங்கே இருக்கிறேன்,எங்கே கிடக்கிறேன் என்று தெரியாத அளவுக்கு ஒரு அயர்ந்த தூக்கம்..

"கண் விழுத்தவுடன் பார்த்தேன் மேலே, மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது", முதலில் என்னுடைய மொபைலை தேடினேன், கையில் அகப்பட்டது, நைட் புல்லா யூஸ் பண்ணதுனால சார்ஜ் இல்ல, எழுந்து சார்ஜ் போட்டுவிட்டு, காலாவதியான காஃபியை ஒரே முடக்கில் முழுங்கிவிட்டு, கழிவறை நோக்கி சென்றேன்..காலை கடன் எல்லாவற்றையும் முடித்து வருவதற்குள், மணி 12.30 நெருங்கியிற்று, இதுக்கு மேலே கால டிபன் கேட்டா செருப்படி தான் விழும், என்று மனதிற்குள் நினைத்து விட்டு,அம்மாவை தேடி கிச்சன் நோக்கி புறப்பட்டேன்,

"அம்ம்மா மதிய உணவை தயார்படுத்தி கொண்டு இருந்தார், "வாடா எழுந்துடியா, காப்பி எங்க கொடு சூடு பண்றேன்" , இல்லாமா நான் குடிச்சிட்டேன், சரி டேபிள் ஆஹ் 3 இட்லியும், சட்னியும் இருக்கு போய் சாப்பிடு, வேணாமா மணி ஆயிட்டு நான் மதியம் சாப்பாடு சாப்ட்டு க்கிறேன், நீ மட்டும் தாம்மா என் மேல அக்கறை
வச்சு இருக்க, டேய், ஏன்டா இப்படி பேசுற நீ எனக்கு ஒரே புள்ள நான் உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன், என்றாள்.. அப்பா ஆபிஸ், போயிட்டாரா..ஹ்ம்ம் என்றாள்..

இன்னைக்கு என்ன பத்தி ஏதாவது சொன்னாரா அப்பா, எப்போதும் போல தான் பா, படிச்சு முடிச்சு 2 வருஷம் ஆகுது இன்னும் ஒழுங்கா வேலைக்கு போல, போன கம்பெனி எல்லாத்துலயும் 2,3 மாசத்துக்கு மேல இல்ல, ஒரு கம்பெனில இருந்தாதான, சர்டிபிகேட் வாங்கலாம்... இன்னும் பொறுப்பு இல்லாம சின்ன பசங்கமாறி ஊர் சுத்திகுட்டு, சாப்பிட்டு சாப்பிட்டு நல்லா தூங்குறான்,
ஒரு பொறுப்பு வேணாமா, இதாண்டா சொன்னார் அப்பா..

அவ்ளோதானா அம்மா, வேற எதாவது சொன்னரா, நானம்மா சொன்ன இந்த டிகிரி படிக்குறேன்னு, நீங்க தான சேர சொன்னிங்க, இப்போ இந்த பீல்ட்ல உள்ள எல்லாருக்கும் வேல இல்ல, எங்க போனாலும் நாய பாத்த மாதிரி கல்லால அடிச்சி தோரத்துறான், அதுவும் பரவா இல்லைன்னு நாய் மாதிரி அலஞ்சு ஒரு கம்பெனி உள்ள போன, தகுதி இல்லாம ஒருத்தவன் நம்மல திட்டுவான்,
நாம படிச்சத்துக்கும் இதுக்கும் சம்மதம் இல்லன்னு தோணும், ஆனா அதெல்லாம் பாக்கமா அவன் சொல்லுற எல்லாத்தயும் செஞ்சு முடிக்கனும், அவன் கம்பெனில போதிய பாதுகாப்பு வசதி இருக்காது, சேப்டி க்ளோவ்ஸ் கொடுக்க மாட்டான், எக்ஸ்ட்ராசர் இருக்காது இருந்தாலும் போட மாட்டான், அதையும் மீறி வேல பாத்தா நமக்கு அந்த ஹீட்டுல ஒன்னு மஞ்சகமாலை வரும், இல்ல ஸ்கின் டெஸிஸ் வரும், கொடுக்குற 7000 சம்பளத்துக்கு வைத்தியம் பாக்கணும், பாத்தா காசு இருக்காது சாப்பிடாம இருப்போம் அல்சர் வரும், ஆனா வீட்லேந்து சாப்டியானு போன் மட்டும் வரும், நானும் சாப்டனு பொய் சொல்லணும், ஒரு 3 மாசம் முடியருத்துக்குள்ள வாழ்க்கையை வெருத்துரும், இதெல்லாம் தாண்டி வேல பாத்த ஒருத்தவன் கால் பண்ணி சொல்லுவான், " மச்சான் இங்க வேக்கண்ட் இருக்கு நல்ல ஜாப் நல்ல சாலரினு,", இத நம்பி இருக்குற வேலையே விட்டுட்டு வந்தா சாரி, "யு ஆர் ஓவர் குவாலிபிகேஷன்" அப்டின்னு சொல்லுவான், கடைசில மொதலந்து வேற கம்பெனிலேந்து ஆரம்பிக்கணும்..

என மூச்சி விடாமல் சொன்னான், " சரிடா கோவிச்சுக்காத வா சாப்பிடு உனக்கு புடிச்ச மீன் குழம்பு, போய் குளிச்சிட்டு வா, சரிம்மா; என்றவன் அறைக்கு செமன்றான்..மொபைல் சார்ஜ் ஆகியிருந்தது, உள்ளே சென்று பேஸ்புக், ட்விட்டர்,இன்ஸ்டாகிராம் என ஒரு சுற்று சுற்றிவந்தான், அதுக்குள் மணி 2 ஐ நெருங்கியது.."டே, இன்னுமா குளிக்கிற என அம்மா கேக்க, இதோ வந்துட்டேன்னு சொன்னான்..இன்னும் குளித்தபாடில்லை.. போய் மீன் குழம்பை ஒரு பிடி பிடித்து விட்டு தன் அறையை நோக்கி வந்தான்..மனதில் ஒரு
குற்ற உணர்வு எப்போதும் ஆட்கொண்டிருப்பது போலே உணர்ந்தான், நாம் இவ்வாறு இருக்க நாம் மட்டும் காரணமில்லை, நம்முடைய சமுதாயம் தான், அதைவிடவேலை வாய்ப்புகளை உருவாக்கத இந்த அரசும் தான் என்று மனதில் நினைத்து கொண்டான்..

'நாம் மட்டும் இப்படி இல்லை, நம் நாட்டில் பலரும் இந்த நிலையில் தான் உள்ளனர்', ஒரு நாள் கண்டிப்பாக வரும்
அன்று நான் என் அம்மாவையும், அப்பாவையும் நன்றாக
பார்த்துக்கொள்வேன்..மீண்டும் தன் மொபைலை எடுத்தான் புதியதாக எதாவது வேலைக்கான அழைப்பு வந்து உள்ளதா என தன் மெயிலை செக் பண்ணினான்.
ஏதும் இல்லை, "ஹெட்செட்டை" காதில் மாட்டிக்கொண்டு யூ டூபீல் புதியதாக ட்ரெண்டிங் ஆன வீடியோவை பிலே செய்து விட்டு தன் கட்டிலில் சாய்ந்தான்..இது ஒரு சுழற்சியாகவே அவன் வாழ்வில் சுழன்றது..

-முகம்மது முஃபாரிஸ்.மு

எழுதியவர் : முகம்மது முஃபாரிஸ்.மு (20-Feb-18, 10:20 am)
Tanglish : naan
பார்வை : 229

மேலே