அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 8

"ஹலோ, இது ஆஷ்லே, நேப்பியர்வில்லேவில் பயிற்சிக்காக குற்றப்பிரிவு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரி, நான் அங்கே உங்கள் நிலையத்தில் இருக்கும் பயிற்சி அதிகாரி மேரி ஜாயிடம் பேசமுடியுமா?" ஷெரிங்க்டன் நிலையத்தில் பயிற்சிக்காக பணியில் அமர்த்தப்பட்டிருந்த தன்னுடன் ஒரே நேரத்தில் பனி நியமனம் செய்யப்பட்ட மேரி ஜாயுடன் பேசுவதற்காக அழைத்தாள் ஆஷ்லே.

"ஒரு நிமிடம், அவருடன் உங்களின் இணைப்பை ஏற்படுத்துகிறேன்" என்றபடி அந்த தொலைபேசி நிர்வாகி சொல்லிவிட்டு மேரி ஜாய் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பை கொடுத்தாள்.

"ஹாய் எம். ஜே., எப்படி இருக்கிறாய், நான் நேப்பியர்வில்லே நிலையத்தில் இருந்து ஆஷ்லே பேசுகிறேன், பணி எப்படி செல்கிறது" என்றாள் ஆஷ்லே.

"ஏய், ஆஷ்லே, எப்படி இருக்கிறாய், என்ன ஒரு இன்ப அதிர்ச்சி, உன்னுடன் பேசுவதில் மகிழ்ச்சி. உன்னை மாண்ட்ரியலில் இருந்து நேப்பியர்வில்லேக்கு மாற்றிவிட்டார்களா?" என்றாள் எம்.ஜே.

"அவர்களாக மாற்றவில்லை, நான் தான் குடிமை மற்றும் சமூக நலன் பிரிவில் இருந்து குற்றப்பிரிவுக்கு மாற்றம் கேட்டேன், அதற்கு அவர்கள், குற்றப்பிரிவு பயிற்சி இங்கே மாண்ட்ரியல் நிலையத்தில் ஏற்கனவே பயிற்சி பணியாளரால் நிரப்பப்பட்டுவிட்டது என்றும் நேப்பியர்வில்லேவில் இருப்பதாகவும் சொன்னார்கள், நான் ஒத்துக்கொண்டேன்" என்றாள் ஆஷ்லே.

அப்படியா, நீ தொடக்கப் பயிற்சியின் போதே குற்றப்பிரிவு மற்றும் தடயவியலில் மிகவும் ஆர்வமாகவும் துப்பறியும் தேர்வில் என்னை விடவும் சுட்டியாக இருந்தாய், அப்போதே நீ சொன்னாய், உனக்கு குற்றவியல் பிரிவில் செல்ல தான் ஆசை என்று, அப்படியே செய்துவிட்டாய், வாழ்த்துக்கள்" என்றாள் எம். ஜே.

"நீ என்னை புகழ்கிறாய், என்ன இருந்தாலும் நீ தானே நமது பேச் டாப்பர். உன்னைப்போல் துல்லியமாக தடயங்களை யாராலும் கைப்பற்றி அதை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி வழக்கை முடிக்க முடியாது, நீ மிகவும் புத்திசாலி, அதனால்தான் உனக்கு மட்டும் டாப்பர் என்பதால் உனது பிரிவையும் உனது இடத்தையும் உன்னையே தேர்ந்தெடுத்துக்கொள்ள சலுகை தந்தார்கள்" என்று பதிலுக்கு புகழ் மாலை சூட்டினாள் ஆஷ்லே.

"என்ன இருந்தாலும் குற்றப்பிரிவிலும் புலனாய்விலும் நீ என்னை முதிவிட்டாய் அல்லவா, இப்போது இருவரும் குற்றப்பிரிவில் தான் பணிபுரிகிறோம், அதனால் என்னைவிடவும் இந்த பிரிவில் கைதேர்ந்தவள் நீ" என்றாள் எம்.ஜே.

"சரி, இந்த பதிலுக்கு பதில் புகழ்ச்சி பாடுவதை விட்டுவிட்டு விஷயத்திற்கு வருவோம்" என்றாள் ஆஷ்லே.

"ம்ம், அதுவும் சரிதான், என்ன விஷயம் சொல்" என்றாள் எம்.ஜே.

"நேராக விஷயத்திற்கு வருகிறேன், அங்கே ஷெரிங்க்டன் நிலையத்தில் அலெக்ஸ் என்று ஏதும் விசாரணை கைதி இருக்கிறாரா" என்றாள் ஆஷ்லே.

"ஏய், இப்படி கேட்டால் எப்படி? விசாரணை கைதிகள் பற்றிய தகவலை வெளியே சொல்லக்கூடாது என உனக்கு தெரியாதா?" என்றாள் எம்.ஜே.

"தெரியும், ஆனால் நான் ஏன் கேட்கிறேன் என்றால் அவன் எனது சகோதரனின் தோழன், நான் அவனை பார்த்தது கூட இல்லை, ஆனால் அவனை வெஸ்ட்மின்ஸ்டரில் கைது செய்து இங்கே ஷெரிங்க்டன் நிலைய குற்றவியல் தடுப்பு பிரிவுக்கு மாற்றி உள்ளதாக அங்கே வெஸ்ட்மின்ஸ்டரில் தெரிவித்தார்கள். அதனால்தான், இப்போது அங்கு வந்தால் அவனை பார்க்க முடியுமா, அவன் மேல் சுமத்தப்பட்ட குற்றம் முடிவெடுக்கப்பட்டது கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு விட்டானா, தண்டனை கொடுத்தாயிற்றா என்பது தான் தெரிய வேண்டும், வேறொன்றும் இல்லை" என்றாள் ஆஷ்லே.

"அப்படியா, ஒரு பத்து நிமிடம் கொடு, நான் பார்த்துவிட்டு உனக்கு உனது அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் எம். ஜே.

இதனிடையே.....

அஷ்லேவின் அலைபேசிக்கு கரோலினிடம் இருந்து அழைப்பு வந்தது.

"என்ன கரோலின், என்ன அதிசயம், எப்போதும் நான் பணியில் இருக்கும் நேரத்தில் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று எனக்கு அழைப்பு விடுக்க மாட்டாய், இப்போது திடீரென அழைப்பு, அதுவும் எனது செல்லம் கரோலினிடம் இருந்து, சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன், சொல், என்ன விஷயம்" என்றாள் ஆஷ்லே.

"ஆஷ்லே, உன்னிடம் இந்த உதவியை கேட்க சங்கடமாக இருக்கிறது, ஆனால் உன்னால் உதவ முடியும் என நம்புகிறேன்." என்றாள் கரோலின்.

"ஏய், என்னிடம் ஏன் இப்படி பார்மலாக எல்லாம் பேசுகிறாய், நீ என் உயிர் தோழி, யாருக்காகவாவது உன்னை நான் விட்டுக்கொடுத்திருக்கிறேனா, உனக்கு நான் உதவாமல் வேறு யார் உதவுவார் கரோலின், சொல், என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றாள் ஆஷ்லே.

"எனது தம்பிக்கு வான்கூவரில் பணி கிடைத்திருக்கிறது, அதனால் நான், எனது தம்பி தங்கை இருவருடன் மாண்ட்ரியலில் இருந்து வான்கூவருக்கு குடி பெயரலாம் என்று நினைக்கிறேன், நீ என்ன சொல்கிறாய்?" என்றாள் கரோலின்.

"என்ன கரோலின், இந்த முடிவு என்னை பொறுத்தவரை ஒரு அவசர முடிவாக தோன்றுகிறது. உனது வேலை விடவேண்டும், அது நல்லதல்ல. நான் சொல்லும் யோசனை என்னவென்றால் முதலில் உனது தம்பி அங்கே சென்று பணியில் சேரட்டும், பிறகு அங்கே ஒரு நல்ல வீடு கிடைக்கட்டும், அதன்பின் உனது தங்கை நீ இருவரும் உங்களுக்கான புது வேலையே அங்கே தேடுங்கள், கிடைத்ததும் இங்கிருந்து செல்லுங்கள், அதுதான் புத்திசாலி தனமான முடிவாக இருக்கும்" என்றாள் ஆஷ்லே.

"நீ சொல்வது சரிதான், அதனால் தான் உனது சகோதரன் ஜொஹானிடம் சொல்லி அவனது மருத்துவமனையில் அக்கவுண்ட்ஸ் துறையில் ஏதும் பணி இருந்தால் எனக்காக ஏற்பாடு செய்து தரச்சொல். இது என் கோரிக்கை" என்றாள் கரோலின்.

"கண்டிப்பாக, அவன் இப்போது மாண்ட்ரியல் வந்துகொண்டிருக்கிறான், ஆனால் ஒரு சிறிய சிக்கலில் இருக்கிறான், அதுமட்டும் அல்ல, அவன் தனது காதலியுடன் வந்துகொண்டிருக்கிறான், நானே ஒரு நல்ல சமயம் பார்த்து அவனிடம் இந்த விஷயத்தை சொல்கிறேன்.அவன் கண்டிப்பாக உதவுவான்" என்றாள் ஆஷ்லே.

"நன்றி ஆஷ்லே" என்றாள் கரோலின்.

"நன்றி சொல்லி என்னை அந்நியப்படுத்துவதை நிறுத்து கரோலின், என்னை கஷ்டப்படுத்ததே" என்றாள் ஆஷ்லே.

"சரி, நான் பிறகு தொடர்பு கொள்கிறேன்" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் கரோலின்.

இப்போது எம்.ஜே. விடம் இருந்து கால் வந்தது.

"ஆஷ்லே, ஆமாம், வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்து அலெக்ஸ் க்ராபோர்ட் என்கிற நபரை அதிவேகமாக காரை இயக்கிய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர், பிறகு விசாரணைக்கும் மற்ற பார்மாலிட்டீஸுக்கும் உடன்படாமல் காவலர்களை கோபமாக திட்டியும் அடிக்க முயன்றும் தப்பி ஓட முயன்றும் இருந்ததாக சொல்லி குற்றப்பிரிவின் கீழ் மாற்றி இருக்கின்றனர், பின்பும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அட்மெண்டாக இருந்ததால் சட்ட அவமதிப்பு மற்றும் குற்றவில்யாழ் தடுப்பு பிரிவில் கைது செய்து விரைவு நீதி மன்றம் வாயிலாக மூன்று நாட்கள் வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டு பூர்டோன்வில்லேவில் இருக்கும் குற்றவியல் விசாரணை மற்றும் தண்டனை வழங்குமிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள், தண்டனை முடிந்து இப்போது தான் நான்கு மணி நேரத்திற்கு முன் அங்கிருந்து அவனை விடுவித்து ரயில் சீட்டு கொடுத்து அவனது ஊரான வெஸ்ட்மின்ஸ்டருக்கு ஏற்றி விட்டிருக்கிறார்கள், அந்த தண்டனையை நிறைவேற்றிய அதிகாரிகள் மூன்று பெரும் இப்போது தான் ஒரு இரண்டு மணி நேரம் முன்பு பணி முடிந்து கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றாள் எம்.ஜே.

"என்ன தண்டனை, வித்தியாசமான தண்டனையா? ஆனால் தண்டனையை ஏன் இங்கே பூர்டோன்வில்லேவில் நிறைவேற்றவேண்டும்? அது இங்கே எங்கள் நேப்பியர்வில்லே கட்டுப்பாடு எல்லைக்கு கிழக்கே இருக்கும் அடுத்த நிலைய எல்லை ஆயிற்றே?" என்றாள் ஆஷ்லே.

"ஆமாம், பொதுவாக நமது கிழக்கு பகுதிகளில் இத்தகைய தண்டனைகளை அந்த இடத்தில தான் நிறைவேற்றுவார்களாம், எனக்கும் இப்போது தான் தெரியும், அதுமட்டும் அல்ல, இந்த தண்டனை மிக மோசமானதாம், முகத்தை கருப்பு துணியால் கட்டி, ஐஸ் கட்டியை ஆசன வாயில் செருகிவிட்டு தொப்புளின் வழியாக மூட்டை பூச்சியாய் ஏற்றி கொடுமை படுத்தி தினமும் காலை மதியம் மாலை என இருபது பிரம்படிகள் கொடுத்திருக்கின்றனர், அதுவும் தலைகீழாக தொங்கவிட்டு. மிகவும் பலமான அடிகள் தான், ஒருவேளை மட்டுமே உணவு தரப்பட்டிருக்கிறது." என்றாள் எம்.ஜே.

"ச்ச, என்ன ஒரு மோசமான தண்டனை, பாவம், இதை எனது சகோதரனிடம் சொல்ல வேண்டும், பாவம், மிகவும் வருத்தப்படுவான், உனக்கு நன்றாக தெரியுமா, அவன் ரயில் ஏறி சென்றுவிட்டான் என்று" என்றாள் ஆஷ்லே.

"அப்படித்தான் எங்களுக்கு இன்பார்மேஷன் வந்திருக்கிறது, அவனை லகோல் ரயில் நிலையத்தில் சீட்டு வாங்கி கொடுத்துவிட்டு இவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று தான் தகவல். அவனது ரயில் இந்நேரம் சென்றுகொண்டிருக்க வேண்டும். சரி, அப்படியே இரு, எனக்கு அவசர செய்தி ஒன்று கம்ம்யூனிகேஷன் சிஸ்டத்தில் ஒலித்தபடி இருக்கிறது, என்ன என்று கேட்கிறேன்" என்றாள் எம்.ஜே.

"எனக்கும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது, நானும் கேட்கிறேன்" என்றபடி அஷ்லேவும் சொல்ல....

இருவருக்கும் ஒரே செய்தி தான் வந்தது. பூர்டோன்வில்லே நிலையத்தில் இருந்து கிளம்பி வந்துகொண்டிருந்த ஹாரிஸ், மோரிஸ், லூயிஸ் என்ற மூன்று காவலாளிகளும் கோயின் டக்ளஸ் சாலை சந்திப்பில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வண்டியோடு எரிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ பிரிவு தீயை அணைத்து உடலை கைப்பற்றி வைத்திருப்பதாகவும் செய்தி வந்தது.

நேப்பியர்வில்லேவும் ஷெரிங்க்டனும் அடுத்தடுத்த நிலையம் என்பதாலும் இந்த இரண்டு நிலைய எல்லையான கோயின் டக்ளஸ் சந்திப்பில் இந்த கொடூர சம்பவம் நடந்திருப்பதாலும் இந்த இரண்டு நிலையங்களும் இந்த செய்தியை பெற்றனர். இருவருமே ஒருவருக்கொருவர் இந்த செய்தியை பேசிக்கொண்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்வதாக சொல்லிக்கொண்டனர்.இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இந்த தகவலை ஆஷ்லே தனது தந்தைக்கு தெரியப்படுத்தியபடியே வண்டியை சம்பவம் நடந்த இடமான கோயின் டக்ளஸ் சந்திப்பை நோக்கி விரைவாக செலுத்தினாள்.

திகில் தொடரும்.

பகுதி 8 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (20-Feb-18, 2:39 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 202

மேலே