ஒரு காதல் பயணம்
பருவங்கள் மாறி
துருவங்கள் மாறி
உன் உருவங்கள் மாறி
நீ என்னை எதிர்கொண்டாலும்
என் காதல் உன்னை
அடையாளம் கானும்
****************
நீ குளித்து வெளியில்
வரும்போது
உன் கூந்தலில் வழியும் நீர்
என் வாலிப வயலுக்கு
சொட்டுநீர் பாசனம்
****************
உன் முத்தத்தை யாசிக்கும்
பிச்சை பாத்திரமாக
இருக்கிறது என் கன்னம்
நீ ஒருமுறை முத்தம் தந்தால்
என் உதடுகள்
அட்சய பாத்திரமாக
மாறிடும் உனக்கு
****************
நான் தேனீர்
பருகும்போதெல்லாம்
உன் இதழ்கள் வந்து
தேனீர் கோப்பையில்
ஒட்டிக்கொள்வதாகவே
பாவித்து தேனீரை பருகுகிறேன்
****************
நீ காற்றில்
அனுப்பிய முத்தங்களை
சிந்தாமல் சிதறாமல்
அப்படியே என்
சுவாச மண்டலம்
உள்வாங்கிக்கொள்கிறது
****************
நீ கார்மேகமாக
நான் குளிர் காற்றாக
உனை சூல்கொள்ளவைத்து
மழை எனும்
மழலையை இப்பூமிக்கு
கொடுப்போம்,
****************