ஆலும் வேலும்

ஆலும் வேலும்
வெண்பா
பல்போனால் முன்னோர் பழமொழிச் சொல்போகும்
சொல்நாலி ரண்டுறுதிச் சொல்லுக்கு --- நல்லதாம்
ஆல்வேலா வாரவேம்பு நாலும்பல் லுக்குறுதி
பால்போலாம் பல்லின்வெண் மைக்கு

பொறித்திட்டச் சீனம் பறித்தக் கடுக்காய்
வறுத்தக் கிராம்பு மிளகும் --- நறுக்கிக்
கரிக்கும் கடலுப்பும் சேர்த்துத் துலக்கப்
பறக்கும்பல் ரோகம்பஞ் சாய்

வறுத்த சிறுகண்டங் கத்திரித்தூள் உப்பால்
சிறுபூச்சிப் பல்லில் மடியும் --- மறுக்கா
பிரம்மதண்டைச் சுட்டுத் தரமாய் அதையும்
உரப்புப்பு டன்விளக்க நன்று

நாயுருவி வாயடக்கச் சாயும் அனைத்துபூச்சி
நாறும்வா யைச்சகியாள் தாயுமே --- காயுமேத்
தாம்பத்ய மென்றுகல்நார் பல்பொடித் தாம்கண்டார்
தாம்பூலம் தாம்பத்யத் திற்கு

பற்பசைபி ரஷ்ஷும் வியாதிக்குத் தற்காப்பா ?
பற்பசையில் உண்டாம் பலவியாதி --- அற்பம்
விளம்பு கிறார்கிராம்புப் புண்டாத் தளத்தில்
களங்கமிலாக் கேள்வி யிது

ராஜப்பழம் நீ

(21.2.2018)

எழுதியவர் : பழனி ராஜன் (21-Feb-18, 9:18 pm)
பார்வை : 546

மேலே