மனிதனும் கருவேல மரமும்

கருவேல மரம்

மனிதனே
என்னை வெட்டாதே!

நீ
என் மாற்றுருவம்
பண்புகளில் என்னை
நகலெடுத்தவன் நீ!

என்னை
வெட்டுவது சரியா???

நான்...
ஆழ வேர்விட்டு
அயலாரின் நீரையும்
கொள்ளையடிப்பேன்!

அவர்கள்
காய்ந்து கருகினாலும்
என் கனவில்கூட
தோன்றாது கருணை!

காற்றின் ஈரப்பதமும்
என் இலைகளுக்கு
தப்பாது!
வறியோர்க்கு
நானளிக்கும் பரிசு
வறண்ட காற்றே!

சுற்றத்தார்
பற்றிய கவலையில்லை
சுயநலமே
என் வாழ்வில் பெரிது!

இப்போதுச்சொல்...

வளமாக வாழ
வளத்தை வசப்படுத்தி
தம் இனத்தையே
வதைத்தெடுக்கும்
நீயும் நானும் வேறுவேறா?

என்னை
வெட்டுவது சரியா???

வெட்டுவதே தீர்வென்றால்
முதலில் நீ வெட்ட வேண்டியது
உன்னுடைய சுயநலத்தை!
வெட்டிவிட்டு வா...
மரணம் தழுவ நான் தயார்!!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (22-Feb-18, 5:08 pm)
பார்வை : 818

மேலே