சைக்கோ

இருள் எனக்கும் வியாபித்திருந்தது, அது ஒரு
நள்ளிரவு நேரம்.. கடைகள் எல்லாம் பூட்டிக்கிடக்கின்றன.. தெரு நாய்கள் குரைக்க
சோம்பல் பட்டு படுத்து உறங்கிக்கிடக்கின்றன.. மஞ்சள் நிற சோடியம் விளக்கு
வெட்டியாய் எரிந்து கொண்டிருந்தது..

நடந்து கொண்டிருக்கிறேன்... ஒரே ஒரு செவலை நாய் மட்டும்
தலை தூக்கி பார்த்து முறைக்க ஆரம்பித்தது...
எனக்கு பட படவென வருகிறது... பயம் நாய் என்றால் பயம்..!!
விரைந்து நடக்க ஆரமித்தேன்...

சே... இன்று பாத்தா பைக் மக்கர் செஞ்சு தொலையனும், வண்டியை அலுவலகத்தில்
நிறுத்தி விட்டு நடக்க ஆரமித்திருந்தேன்...
அலுவலகத்தில் இருந்து வீடு ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தான் வேறு வாகனகங்களோ
பேருந்துகள் இல்லாத அந்த நள்ளிரவில் நான் மட்டும் நடந்து கொண்டிருந்தேன்..
கடை வீதிகள் அங்காடிகள் நிறைந்த தெருக்கக்களில் ஆங்காங்கே மின்விளக்குகள்
இருந்தன அவை போதுமான வெளிச்சத்தை தந்தன...
சில தெருக்களை தாண்டியதும் அவையும் இல்லை...
வழியை இருள் முழுவதும் ஆக்கிரமித்துத்துக்கொண்டது...!!
எதிரில் இருப்பது எதுவென்று தெரியதளவு இருள் எங்கும்..!!
செல்போன் டார்ச் ஆன் செய்து நடக்க ஆரமித்தேன்... வழி நடக்க போதுமான
அளவே வெளிச்சம்..
டவுனை தாண்டினால் காடு போல வேலி காத்தான் முட்புதர்களும்,
கருவேலம் மரங்களுமே அடர்ந்திருந்தன.. இது ஒரு குறுக்கு வழி, சீக்கிரம் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் பகல் நேரத்தில் இந்த வழியை உபயோகித்துக்கொண்டிருந்தனர்
இந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாது... பாதையில் முட்கள் இருக்கும், நடந்து செல்ல ஏதுவாய்
ஒற்றையடி பாதை மட்டும் நீண்டு செல்லும்..

காற்றில் வேலிக்காத்தான் கருவேல மரங்கள் சல சலவென சத்தமிட்டன,
அந்த இரவில் அது அமானுஷ்யமாய் கேட்டது..!! சுவர் கோழியோ பக்கத்தில் தேங்கிய
ஏரி தண்ணீர் தவளைகளோ "பர்க் பர்க்" என்று சத்தமிட்டுக்கொண்டிருந்தன..

"காப்பாத்துங்க" என்று ஒரு பெண்ணின் அலறல் அந்த இரவில் அந்த இடத்தில்
அமானுஷ்யமாய் கேட்டது..!!
திடுக்கிட்டேன்...!!

மறுபடியும் "ஐயோ காப்பாத்துங்க "
உன்னிப்பாக கவனித்தேன்...
பக்கத்தில் இன்னொரு ஒற்றையடி பாதை நீண்டு செல்லும் இடத்தில் ஒரு வீடு
இருந்தது, அதை வீடு என்று எப்படி சொல்வது..? எத்தனையோ காலத்திற்கு முன்
மனிதர்கள் வசித்து இப்போது பாழடைந்து கிடக்கும் வீடு அது..
இந்த நேரத்தில் அங்கு இதென்ன விபரீத சத்தம்..?!!

எனக்கு பேய்களை பற்றிய நம்பிக்கைகளும் கிடையாது, பயமும் இல்லை
எனவே தைரியமாக அந்த குரல் வந்த வீட்டை நோக்கி சற்று வேகமாக நடந்தேன்...
இரவில் அந்த வீடு ஹாலிவுட் படங்களில் வரும் திகிலூட்டப்பட்ட வீட்டினை போலவே
பேரமைதியில் காணப்பட்டது..!!
சற்று நிதானித்தேன், இங்கே இருந்து தானே அந்த சத்தம் வந்தது.??

வீட்டின் வலது பக்க மேற்கூரையில் மெழுகுவர்த்தியின் சன்னமான வெளிச்சம்,
அதை நோக்கி சத்தமில்லாமல் நடந்தேன்..

வீட்டில் ஜன்னல் என்று எதுவும் இல்லை, அப்புறம் வெளிச்சம் மட்டும் எப்படி??
யோசித்தேன்.. மேல்புறத்தில் ஒரு துவாரம் தலை மட்டும் நுழையும் அளவுக்கு..
ஒரு பாறாங்கல்லை நகர்த்தி வைத்து, சற்றே பெரிய கல்லை அடுக்கி வைத்து
துவாரத்தில் சிரமப்பட்டு தலையை நுழைத்து பார்த்தேன்..

உள்ளே..

ஓரு பெண்ணின் திகிலடைந்த முகம் கண்ணில்ப்பட்டது..
தலை கலைந்து கிடந்தது.. கண்ணுக்கு மை தீட்டி இருந்திருப்பாள் போல,
அழுததால் மை கரைந்து கன்னத்தில் கோடாக மாறியிருந்தது..
எதோ ஒரு திக்கில் தன் திகிலடைந்த முகத்தால் கலவரபட்டு யாரிடமோ
கெஞ்சிக்கொண்டிருந்தாள்..

என்ன விட்ரு..

இன்னும் கொஞ்சம் தலை நுழைத்து பார்த்ததில் அவள் கைகள்
பின்புறமாய் கட்டப்பட்டு இருந்தது தெரிந்தது..

"யாராவது காப்பாத்துங்களேன் என்ன விட்ரு என்ன கொன்னுட்டாத" கதறிக்கொண்டிருந்தாள்..

அந்த பெண்ணை எனக்கு தெரியும், ஒரு மாதிரியான பெண்
தெளிவாக சொல்லவேண்டும் என்றால் "பஜாரி'..
இரவு நேரங்களில் தன்னை அலங்கரித்துக்கொண்டு கஸ்டமெரை எதிர்பார்த்து காத்திருப்பாள்
பக்கத்துக்கு டவுனில் அவள் இங்கே எப்படி..?
எதிரில் இருப்பவனின் நிழல் மட்டும் அவள் மேல் விழுந்து கொண்டிருந்தது..
அவனுக்கு பின் தான் மெழுகுவர்த்தி இருந்தது போலும்...

அவன் அவளை நோக்கி நகர்ந்து வந்தான் அவனின் நிழல் அவன் நடந்து வர வர
அவளின் மெது கவிழ்ந்தது...
அவன் கையில் கூரிய ஆனால் மெலிதான கத்தி இருந்தது, அது அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் பளபளத்தது...
அவன் முழுதாய் அவளை நெருங்கியதும் நான் திடுக்கிட்டேன்..
இவன்,, இவன் அசோக் அல்லவா...!!!

அசோக் எங்களுடன் பணிபுரிபவன் அவன் பணியில் சேர்ந்து
ஒருவருடமே ஆகியிருந்தது,,
இவன் மனைவி இவனை விட்டு விட்டு வேறொருவனை விரும்பி ஓடிவிட்டாள் என்று
தெரிந்தது.. இவன் யாரிடமும் அதிகம் பேசாமல் எப்பொழுதும் தனியே இருப்பான்..
அதனால் அவனை நாங்கள் கண்டுகொள்வது இல்லை...
இன்று அலுவலகத்தில் எனக்கு முன்னமே கிளம்பி போனவன் இங்கே இப்பொழுது..

" வேணாம் என்ன விட்ரு என்ன ஒண்ணும் பண்ணிடாத" அவள் கலவரத்துடன்
கத்தியையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்...

அசோக் எதுவும் பேசவில்லை அவளை நெருங்கி அவள் தலை முடியை பிடித்து
மேல் தூக்கி அவள் முகத்தில் தான் வைத்திருந்த கத்தியால் கிழித்தான்..
"அய்யய்யோ" அலறினாள், ரத்தம் அவள் முகத்தில் வடிய ஆரமித்தது..
வேகமாக அவள் உடலினை கத்தியால் கிழிக்க ஆரமித்தான்...
ஆ.... அவள் அலறினாள்..

நடந்த சம்பவம் மூளையில் உறைக்க நான் கதவை நோக்கி ஓடினேன்..
டமால்...
ஒரு ஏத்து இத்து போன கதவு உடைந்து கீழே விழுந்தது...
திடுப்பென நுழைந்த என்னை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தான்..

"காப்பாத்துங்க என்னை காப்பாத்துங்க " என்னை கண்டு அந்த பெண் வழியும் ரத்தத்துடன்
கதறினாள்...

"அஷோக் என்ன பண்ற.? ஏன் இப்படி பண்ற.? பைத்தியமாடா நீ இடியட்...!??
கத்திய முதல்ல தூர போடு சொல்றேன்ல.."

முதலில் என்னை கண்டு திடுக்கிட்ட அவன் இப்போது இருளுக்கு
பக்கமாய் சற்றே நகர்ந்து கொண்டான்...
மெழுகுவர்த்தியின் வெளிச்சமும் இருளின் கருமையும் அவன் முகத்துக்கு
ஒரு குரூரத்தைக்கொடுத்தது...!!

நீ என்ன காரியம் பண்ணிட்டு இருந்தனு உனக்கு புரியுதா..?

புரியுது... களை எடுத்துட்டு இருக்கேன்....

என்ன..???

பஜாரிகளையும் புருஷன ஏமாத்துற பொண்ணுங்களையும் களை எடுத்துட்டு இருக்கேன்...
லுக்.. உனக்கு என்ன பத்தி தெரியாதுல, இங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு கம்பெனில
ஒர்க் பண்ணிட்டு இருந்தேன் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி அப்போ தான் எனக்கு
கல்யாணம் பண்ணி வச்சாங்க.. கல்யாணம் பண்ணதும் தனி குடித்தனம் போனோம்
நானும் அவளும்.. லைப் ரொம்ப சந்தோசமா இருந்தது..
ஆனா எங்களுக்கு குழந்தை மட்டும் இல்லன்ற குறைதான்..
அவள் மேல தான் குறை இருக்குனு நான் நம்பள அதுக்கு முன்னாடி நான்
docter கிட்ட செக்கப் பண்ணிக்க விரும்பினேன்....
நாளைக்கு வாங்க ரிப்போர்ட் ரெடியா இருக்கும்னு சொன்னாரு...
அடுத்தநாள் எனக்கு நைட்ஷிப்ட் வீட்டுல இருந்தப்போ என் அவளுக்கு திடீர்னு
மயக்கம் வாந்தி அவ உண்டாக்கிருக்குறத சொன்னா ...
ரொம்ப சந்தோஷமா இருந்தது.. கடைசில கடவுள் கண்ண திறந்துட்டதாவே நம்பினேன்..
நைட்ஷிப்ட் ரெடி ஆனேன்...
அதுக்கு முன்னாடி டாக்ட்டர் கிட்ட போய் ரிப்போர்ட்டை வாங்கிட்டு
docter கிட்ட போய் கொடுத்தேன்....

"சாரி அசோக் உங்களுக்கு குழந்தை பிறக்கிற தகுதி இல்ல
உங்க உயிர் அணுக்கு அதுக்கு வாய்ப்பே இல்ல"

நான் அதிர்ந்தேன்,, docter நிஜமா தான் சொல்றிங்களா..?

100% உண்மை iam சாரி அசோக்..

நான் என் அலுவலத்திற்கு வந்து எப்படி யோசித்தும்
என்னக்கு புரியல..
எப்படி சாத்தியம்..??
மண்டை வலி அதிகமாக லீவு சொல்லிட்டு வந்து விட்டு கதவை
தட்ட கையை கொண்டு போகும் முன்...
உள்ளிருந்து பேச்சு சத்தமும் சிணுங்கும் சத்தமும் வந்தது..
சத்தம் காட்டாமல் ஜன்னலை எட்டி பார்க்கிறேன்,, அங்க என்
மனைவி நான் தாலி கட்டின மனைவி யார் உலகம்னு இதுவரை வாழ்ந்து நினைச்சுட்டு இருந்தேனோ
அவ உடம்புல ஒட்டு துணி இல்லாம இன்னொருத்தன் கூட படுத்துட்டு இருந்தா...
வாய பொத்தி சத்தம் கேக்காம கதறினேன்...

எல்லாம் முடிஞ்சம் அவன் வெளிய வந்தான்,, எப்படி பின் பக்க வழியா
பக்கத்துல இருந்த மண்வெட்டியால ஒரு போடு சத்தம் கேக்காம செத்து போய்ட்டான்...

உள்ள வந்து அவ காதலன் செத்து போனத காட்டி,,,
நான் என் காதலருடன் போகிறேன் என்னை தேட வேண்டாம்னு அவளை லெட்டர்
எழுதி வாங்கி வச்சுட்டு,, உன் காதலன் போன இடத்துக்கே அனுபுறேன்னு
அவ கழுத்தை நெறிக்க ஆரமிச்சேன் அவ மூச்சுக்கு திணறுறத பார்த்ததும் எனக்குள்ள
ஒரு சந்தோசம்,, அவ துடிதுடிச்சு செத்து போனா....
ரெண்டு பேறையும் குழி தோண்டி புதைச்சுட்டு அவ எழுதுன லெட்டரை காட்டி
போலீஸ்கிட்டருந்தும், சொந்தக்காரங்க கிட்ட இருந்தும் தப்பிச்சேன்....

எல்லாம் முடிஞ்சதுனு சந்தோஷப்பட்டேன் ஆனா எனக்குள்ள ஒரு குரல்
போ.. கொல்லு பொண்ணுங்கள கொல்லு...
ஏமாத்துற பொண்ணுகளையெல்லாம் கொல்லு கொலை செய்னு கேட்டுட்டு இருந்தது...
இப்போ கூட கேக்குது கொல்லு அவளை கொல்லுனு,,
தலையை பிடித்து ஒரு உலுப்பு
உலுப்பிக்கொண்டு என்னை பார்த்தான்....

நீ இங்க இருந்து போயிடு இல்ல நீயும் இவளையோட சேர்ந்து
செத்து போய்ட்டுவ.. சொல்லி விட்டு அவளை நோக்கி திரும்பினான்....
அவள் அலற...

நான் அசோக்கை நோக்கி பாய்ந்து ஓடி அவனை கெட்டியாக பிடித்தது
கொண்டேன்...

அசோக் வேணாம் நீ பண்றது பெரிய தப்பு...

விட்றா .. என்ன விடு. . உன்னையும் கொன்னுருவேண்டா விட்றா..

வேணாம் அசோக்...

சரேல் என பின்னால் நகர்த்திக்கொண்டு போய் சுவற்றில் என்னை
மோதினா நான் சற்று பிடி தளர என் கையில் கத்தியால் கிறினான்...
கை முகம் வயிறு என ஒவ்வொன்றாய் கிற ஆரமித்தான்...
அவன் எதிர்பாராத நொடி நன் என் முஷ்டியால் ஓங்கி முக்கத்தில் குத்த,,
அவன் தள்ளாடினான் எப்பொழுதோ கற்று கொண்ட கராத்தே கொஞ்சம் கை
கொடுக்க ஆரமித்தது...
வயிற்றில் கால் முட்டியால் இடிக்க வயிற்றை பிடித்து கொண்டு சரிந்தான்..
பின் எழுந்து என்னை நோக்கி பாய நான் விலகி கொண்டேன்..
சுவற்றில் போய் முட்டிக்கொண்டான்...
அப்படியே பின்புறமாய் கை மணிக்கட்டால் அவன் கழுத்தை சுற்றி இறுக்க
ஆரமித்தேன்.. அவன் திமிறினான் நான் கெட்டியாக பிடித்தது கொண்டேன்...
அவன் தளர்ந்தான்... இறந்தான் ...

நான் சோர்வுடன் எழுந்து அவளை விடுவித்தேன்..
அவள் மயக்கமடைந்து கிடந்தாள்...

நான் போனினை எடுத்து பார்த்தேன் நடந்த
களேபரத்தில் screen கீறல் விழுந்து போய் கிடந்தது...
ஆம்புலன்ஸ்க்கு போலீஸ்க்கும் தகவல் சொல்ல ஆரம்பித்தேன்...

லாக்கப் அந்த அதிகாரி கேட்டார்
" என்ன நடந்தது..??

நான் சொல்ல ஆரமித்தேன்....!!!!

எழுதியவர் : அருள்.ஜெ (23-Feb-18, 10:29 pm)
பார்வை : 356

மேலே