காற்றுக்கலன்கள்

காற்றுக் கலன்கள்

சுருங்கிய நிலப்பரப்புகளில்
பிதுங்கி நிற்பவை
இவை மட்டுமே!

சலனங்களில் சரிந்த
காடுகளை
மனிதர்கள்
சமன் செய்யாவிடில்
பாலைவனங்கள்
மட்டுமே
எஞ்சும்!

மூச்சு விட
இல்லங்கள்
தோறும்
காற்று கலன்கள்
நிறைந்திருக்கும்.

- சாமி எழிலன்

எழுதியவர் : சாமி எழிலன் (27-Feb-18, 6:16 am)
பார்வை : 52

மேலே