அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 13

30 டிசம்பர் விடியல்...

"எம்.ஜே., விடிந்து விட்டது, இப்போது தான் நாம் கேர் காண்டியாக் நிலையத்தை அடைகிறோம், நாளை இரவு புத்தாண்டு தொடங்க இருக்கிறது, நீ ஊருக்கு செல்ல விரும்பவில்லை, நான் பணிச்சுமை காரணமாக போக முடியாத சூழ்நிலை." என்றார் கென்னடி.

"மிஸ்டர் கென்னடி, நீங்கள் புத்தாண்டிற்கு உங்கள் குடும்பத்தோடு இருக்க எண்ணினால் செல்லுங்கள், ஏனென்றால் அடாப்ஸி ரிப்போட் வருவதற்கு குறைந்தபட்சம் இருபத்திநான்கு மணி நேரம் ஆகும். அதன்பின் மற்ற முடிவுகள் என இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம், இப்போது நாம் அலெக்ஸை பார்க்கப்போகிறோம், அவனிடம் விசாரணை நடத்திய பின்பு தான் நமக்கு ஏதும் தடயம் கிடைக்கும், நாம் இப்போது அலெக்ஸை சந்திப்போம், விசாரிப்போம், பின்பு நீங்கள் விடுமுறைக்கு சென்று வாருங்கள், பிறகு மீண்டும் விசாரணையை தொடரலாம், இதற்கிடையே, நான் உங்கள் மகள் ஆஷ்லே இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏற்க அப்ரூவல் போட்டு மேலிடத்திற்கு அனுப்புகிறேன், மற்றவை உங்களிடம் அவ்வப்போது தகவல்களை சொல்லிக்கொண்டே இருக்கிறேன், வெறும் இரண்டு நாட்கள் தானே, சென்று வாருங்கள்" என்றாள் எம்.ஜே.

"நீ சொல்வது நல்ல யோசனை தான், சரி, நான் அதை பற்றி யோசிக்கிறேன், முதலில் நாம் அலெக்ஸை பார்க்கலாமா?" என்றார் கென்னடி.

"ஓ தாராளமாக" என்றபடி எம்.ஜே. சிரிக்க, இருவரும் கேர் காண்டியாக் கட்டுப்பாட்டு அறை காவல் மையத்தினுள் சென்றனர்.

"வாருங்கள் வாருங்கள், எப்படி இருக்கிறீர்கள் மிஸ்டர் கென்னடி" என்றபடி கென்னடியை வரவேற்றாள் கேர் காண்டியாக் நிலைய அதிகாரி ஷெர்லின்.

"ஓ ஷெர்லின், எப்படி இருக்கிறாய், என்னிடம் பயிற்சி பெற்ற பல புத்திசாலி பெண்களில் நீ முக்கியமானவள், எப்படி இருக்கிறது உனது பணி." என்றார் கென்னடி.

"ஓ, மிக அற்புதம் மிஸ்டர் கென்னடி. உங்கள் பணியும் மிக சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன், ஆனால் உங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்காமல் இருப்பது வருத்தம், எப்போது ரிட்டையர் ஆகிறீர்கள்?" என்றாள் ஷெர்லின்.

"எனக்கு என்ன அவ்வளவு வயதாகிவிட்டதா என்ன?" என்று கேட்டபடி சிரித்தார் கென்னடி.

"உங்கள் உருவத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் வயதாகவில்லை மிஸ்டர் கென்னடி, ஆனால் உங்கள் சான்றிதழ் படி வயதாகிவிட்டதே....." என்றபடி ஷெர்லினும் சிரித்தாள்.

"சரி, நாம் அலெக்ஸை பார்க்கலாமா" என்றார் கென்னடி.

"பை தி வே, இவர் தான் எம்.ஜே.வா?" என்றாள் ஷெர்லின்.

"ஆமா, நாம் பேசும் ஆர்வத்தில் எனது புதிய படைப்பை உன்னிடம் அறிமுகப்படுத்த மறந்துவிட்டேன், இது, எம்.ஜே. குற்றவியல் மற்றும் தடயவியல் டாப்பர்." என்றார் கென்னடி.

"ஐ ஆம் மேரி ஜாய், சுருக்கமாக எம்.ஜே" என்றாள் எம்.ஜே.

"நைஸ் மீட்டிங் யு, ஓகே, லெட்ஸ் கோ டு மீட் ஹிம்" என்றபடி அலெக்ஸை காக்க வைத்திருக்கும் அறைக்கு சென்றனர் மூவரும்.

மாண்ட்ரியலில்.......

"அம்மா, இன்னும் இந்த ஆஷ்லே எழுந்திருக்கவில்லையா?" என்றபடியே தனது அறையிலிருந்து வெளியே வந்தான் ஜொஹான்.

"இரவு முழுதும் தூங்கிய நீயே இப்போது தான் எழுந்து வருகிறாய், அவளோ இன்று அதிகாலை நான்கு மணிக்குதான் வந்தாள், அதனால் உறங்குகிறாள்" என்றாள் ஆக்னஸ்.

"உன்னுடைய மகளுக்கு தான் நீ முழு ஆதரவு இல்லையா அம்மா" என்றான் ஜொஹான்.

"உண்மையை சொன்னேன் ஜொஹான்" என்று சிரித்தபடியே சொன்னாள் ஆக்னஸ்.

அந்நேரம் ஆஷ்லே தனது தோழி கரோலினுடன் வெளியில் தனியாக அமைக்கப்பட்டிருந்த அவளது அறையில் இருந்து வீட்டினுள் வந்தாள்.

"என்ன, எனது பெயர் இங்கே பறந்துகொண்டிருக்கிறது?" என்றபடியே நுழைந்தாள் ஆஷ்லே.

"வா ஆஷ்லே, வா கரோலின், என்னதான் நீ மாண்ட்ரியலில் இருந்தாலும் எண்களின் இந்த புது வீட்டிற்கு இப்போது தான் முதன்முறையாக வருகிறாய்" என்றான் ஜொஹான்.

"இல்லை ஜொஹான், அனாவசியமாக வந்து உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை, அதனால் தான்" என்றாள் கரோலின்.

"எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஆரம்பம் முதலே நீ இப்படி ரிசர்வ் டைப்பாக இருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், அது அவளுடைய தனிப்பட்ட விஷயம், நமக்காக அவள் ஏன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்?" என்றாள் ஆஷ்லே.

"அவளை கேட்டால் நீ ஏன் பதில் சொல்கிறாய்" என்றான் ஜொஹான்.

"ஏன், அவள் சொன்னாலும் நான் சொன்னாலும் பதில் இது தான், என்ன கரோலின்?" என்றாள் ஆஷ்லே.

"அப்படி இல்லை ஆஷ்லே, நீ சொல்வது ஒருபுறம் சரி தான் என்றாலும் அது எனது நேச்சர் இல்லை, நானும் சகஜமாக பழகக்கூடியவள் தானே ஆஷ்லே, உன்னோடு நான் பேசும்போது நீ அதேபோல் ரியலைஸ் பண்ணி இருக்கியா?" என்றாள் கரோலின்.

"சரி சரி, இப்போது ஆர்க்யு வேண்டாம், ப்ரேக்பாஸ்ட் முடிக்கலாம், பிறகு எங்காவது வெளியே போகலாம், அப்புறம் ஜொஹான், உன்னிடம் கரோலின் ஏதோ கேட்க வேண்டுமாம்" என்றாள் ஆஷ்லே.

"என்ன கரோலின், ஆஷ்லே சிபாரிசா, நீ நேரடியாக கேட்கலாமே" என்றான் ஜொஹான்.

அப்போது தான் மெர்சி தயாராகி வந்தாள்.

"வா மெர்சி, எப்படி இருக்கிறாய், இரவில் தாமதமாக உறங்கினாயா?" என்று சிரித்தபடியே கேட்டாள் ஆஷ்லே.

"அப்படி இல்லை..." என இழுத்தாள் மெர்சி.

"இல்லை இல்லை, வேண்டாம், எனக்கு புரிகிறது, என்ன செய்வது, ஜொஹான் சற்று முரட்டு ஆள் தான், ஜிம் பாடி வேறு, தாக்குப்பிடித்து இருக்கிறாயே, உன்னை பாராட்டத்தான் வேண்டும்" என்றாள் ஆஷ்லே.

"ஆஷ்லே, இது ரொம்ப ஓவர் தெரியுமா" என்றான் ஜொஹான்.

"சரி சரி, இது ப்ரேக்பாஸ்ட் டைம்" என்றபடி டைனிங் டேபிளுக்கு வந்தாள் ஆஷ்லே.

அனைவரும் டைனிங் டேபிளில் கூடினர்.

கலகலப்பாக நகர்ந்தது பொழுது.

கேர் காண்டியாக் காவல் கட்டுப்பாட்டு அறை.....

"எம்.ஜே., நான் இருப்பது தெரிய வேண்டாம், நான் இங்கே வீடியோ மூலமாக நீ விசாரிப்பதை பார்க்கிறேன், நீ சென்று அலெக்ஸை விசாரி, ஷெர்லின், நீயும் ஆவலுடன் செல்" என்றார் கென்னடி.

"ஓகே மிஸ்டர் கென்னடி" என்றபடி இருவரும் அலெக்ஸ் காத்திருக்கும் அறைக்குள் சென்றனர்.

உள்ளே சுவற்றை பார்த்தபடி கோபமாக உட்கார்ந்திருந்தான் அலெக்ஸ்.

"மிஸ்டர் அலெக்ஸ்...." என அழைத்தாள் எம்.ஜே.

திரும்பிப்பார்த்தான் அலெக்ஸ்.

திகில் தொடரும்

பகுதி 13 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (27-Feb-18, 5:39 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 360

மேலே