அன்னை
ஆயிரமாயிரம் கவிதைகள் - அவள்
அன்பைப் புகழ
ஆயினும் இல்லை - அவள்
அன்பின் பெருமைகள்.
என்னவென்று சொல்வேன் தாயே - நின்
ஆழமறியா தியாகங்கள்
எப்படிச் சொல்வேன் தாயே - நின்
அன்புச் செய்கைகள்
மொழிகளைத் தாண்டியது அல்லவே - நின்
தியாகத்தின் ஆழங்கள்
சொற்கள் கிடைக்கவில்லை தாயே - நின்
அன்பை எடுத்தியம்பவே
ஒன்றும் சொல்லத் தேவையில்லை - நின்
செயல்களைக் கூறிடவே
என் மௌனம் கூறுமே - நின்
ஆற்றல் என்னவென்று.
உன்னை நினைக்கையில் ஓடிவருதே - என்
கண்ணீர் முந்திக் கொண்டு
உன் நினைவு ஒன்றே - என்னைத்
தேற்றப் போதும் தாயே
நீயின்றி வாழ்வில்லை எனக்கு - நின்
துணையின்றி எது என் இலக்கு
உன்னோடு ஓர் நாளெனினும் வாழத்
துடிக்குதே என் மனசு
வாராய் தாயே இலக்கற்ற - என்
வாழ்வில் ஒளியேற்றவே
தாராய் தாயே யாரும் தர
இயலா நின் அன்பை.