கலியுக சீதை

என்னவளை பிரிந்து
கடல் தாண்டி போனேன்,
காலங்கள் பல கழித்து
அவள் வருகைக்கா காத்திருந்தேன் ,

அசோக வனத்திலிருந்து வந்த சீதை போல
அவள் என்னெதிரே வந்தாள்,
இரு மழைத்துளி இடைவெளியில்,
இருவரும் எதிரெதிரே நிற்கையில்,

இவள் மண்ணில் வந்த தேவதையா,
இல்லை மனதை மயக்கும் பொய்மானா ,
என்ற சிறு எண்ணம் தோன்றி முடியும் முன்னே,

விழியால் வேள்வி செய்து
என்னையும் சேர்த்து குதித்தாள் .

எழுதியவர் : புதுகை செநா (27-Feb-18, 3:57 pm)
Tanglish : kaliyuga seethai
பார்வை : 144

மேலே