மனிதம் இல்லா மனிதன்
எம் மண்ணின் பசுமையை அழிக்கும்...
எம் நீரை உறிஞ்சி எடுக்கும்
எம் மண்ணை அள்ளி எடுக்கும்
எம் மீது மண்ணை போடும்
எம் மலையை வெட்டி எடுக்கும்
எம் காட்டை வெட்டி சாய்க்கும்
எம் வயலை மலடாக்கும்
எம்மை நீர் இன்றி சாகடிக்கும்
எம் மூச்சை திணறடித்து கொல்லும்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து