யோசிக்கும்போது
பிறகு வரப்போகும்
அனைத்தும் யானறிவேன்.
தெரிபவை யாவும்
குற்ற பிம்பங்கள்...நீங்கள்.
உயிர் தணிக்கை
செய்தறியா நான்
உயிர் உணர்த்தும்
கதிர் கொண்டவன்..ஆக,
சஞ்சலித்து குமைந்து
பூங்காவில் சரிந்த
புதிரான மனிதரே
கொஞ்சம்
தப்பாய் வாழுங்கள்
எல்லாம் சரியாகும்.