சிரியாவை காத்திடு இறைவா
சிரியா ரத்தக் கண்ணீர் விடுகிறாள்
அங்கு 'இனத்திற்குள்' 'இனப் படுகொலை
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய்
சில ஆண்டுகளாய் நடந்தவண்ணம் இருக்கின்றது
ஒரு கொடுங்கோலன் ஆட்சியில்
பல்லாயிரக் கணக்கில் மக்கள் மடிந்தனர்
மடிகின்றனர் இன்னும் -பார்த்துக்கொண்டிருக்கிறதே
உலகு, இதை நிறுத்த வழிதான் என்ன
'ஹிட்லர்'' 'முசோலினி' மறைவுக்குப்பின்
'இனி இனப்படுகொலைகள்' உலகில் இல்லை
என்றது ஐரோப்பா அன்று , ஆனால் அது
மீண்டும் வந்துவிட்டதே ஒரு 'அம்மைநோய் போல்'
'அக்கிரமங்கள்,அநீதி, கொடூரங்கள்
பெருகி உச்சஸ்தாயில் கொக்கரித்தால்
நான் வருவேன் உலகைக் காக்க' என்றான்
இறைவன், இந்த சிரியா மக்களின்
மரண அலறல் இன்னும் உனக்கு கேட்கலையா
இறைவா ? இதற்கொரு வழி காட்டு
எங்கள் கண் முன்னால் தினம் தினம்
மாண்டிடும் ஒன்றுமறியா குளவிகள்
பாலகர், மகளிர்,இன்னும் செய்வதறியா
நிற்கும் ஆன், பெண் என்றிவர்கள் .....
அப்பப்பா, என்ன கொடுமை...........
இதற்கொரு முற்றுப்புள்ளி வைப்பாய் இறைவா
மனிதனுக்கு மனித நேயம் பெருகிட
வழி செய்வாய், அவன் மிருகமாய்
மாறிவிட்டால் , படைப்பின் அர்த்தம்
அநர்த்தமாகிவிடுமே இறைவா !