காதல்கண் நோய்

உன் விழிப்பார்வையிலே விழுந்தேனடி ,
உறக்கம் தொலைத்து இரவெல்லாம் விழித்தேனடி ,
உன்னை பார்க்க வேண்டுமென்று,
என்னிதயம் தினம் ஏங்கியதடி
அதனால்தான் உன்பின்னே வந்தேனடி,
ஒளிக்குறைந்தால் வரும் மலைக்கண் நோயை போல்
அன்பு குறைந்தால் காதல்கண் நோய் வந்திடுமே,
என்று எண்ணியே எல்லை மீறினேன் மன்னித்துவிடுடி,
இதுவரை நிலவொளி குளிரென்று நினைத்தேனடி ,
கோவத்தால் விழிவொளி என்னை எரிக்கின்றதடி,
கோவத்தை கொஞ்சம் விட்டுவிடுடி,
கோவைப்பழ இதழே சிரித்துவிடுடி,