நாணம் ஓர் அலங்காரம்🌷
நம்மில் நாணம் விடைபெறும் நேரம்,
நம்முடலில் உடை இனி பாரம்,
நம்மிடை புக இடமின்றி வளியோடும் தூரம்,
மன்மதன் மனமெரியும் உன் அழகின் சாரம்,(கண்டு) அழகில்லை அவன் சம்சாரம்,(என்று)
உன் நாணத்தின் வண்ணம் கண்டு வானவில் வெட்கி ஒதுங்கும் ஓரம்,
ஏழேழு ஜென்மத்திலும் எவர் தடுப்பினும் நீயே என் தாரம்,
ஏழுகடல் தாண்டி மறைத்தாலும்
உனையிணைய எடுப்பேன் அவதாரம் ,உன் அழகிற்கு தேவையில்லை ஒரு அலங்காரம்,
அதில் என் மனம் கொள்ளும் அகங்காரம்★