உயிருள்ளவரை
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் கண்களைக் கேட்டேன்
கண்ணீராய் காெடுத்தாள்
உதடுகளைக் கேட்டேன்
புன்னகையாய் காெடுத்தாள்
மலர்களைக் கேட்டேன்
மாலையாய் காெடுத்தாள்
தென்றலைக் கேட்டேன்
சுவாசத்தைக் காெடுத்தாள்
இதயத்தைக் கேட்டேன்
காதலைக் காெடுத்தாள்
எல்லாம் உனக்கே உயிரே என்றாள்
என்னையே காெடுப்பேன் அவளுக்காய்
உயிருள்ளவரை.