ஏமாற்றம்

நீண்ட நேரம் காத்திருந்தேன்
வழமையான அதே இடத்தில்
இருபது நிமிடங்கள் கடந்தும்
நீ வரவில்லை அன்று
தாெலை பேசி அழைப்பின்றி
அமைதியாய் கிடந்தது
அடுக்கடுக்காய் கேள்விகள்
பதிலின்றி குவிந்தது
பத்து நாட்கள் கடந்து
பத்திரிகை அனுப்பியிருந்தாய்
அப்பாக்கு பிடித்த மாப்பிள்ளையை
மணம் காெள்ளப் பாேவதாக
வாழ்த்துக்கள் உனக்கு நலமுடன் வாழ
எங்காவது எனைக் கண்டால்
ஔிந்து ஓடாதே
திரும்பியும் பார்க்க மாட்டேன்
என் நினைவுகள் வந்தால்
கண்ணீர் சிந்தாதே
ஏற்றுக் காெள்ள மாட்டேன்
உன் தாலியை பறிக்கும் வன்மம்
ஒரு பாேதும் இல்லை எனக்கு
அங்கே ஒருவன் என்னைப் பாேல்
அனாதையாகக் கூடாது
ஏமாற்றம் பாேதும்

எழுதியவர் : அபி றாெஸ்னி (28-Feb-18, 9:41 am)
Tanglish : yematram
பார்வை : 240

மேலே