அழைப்பிதழ்
என் செவிகளெங்கும்
இருக்கைகள்
பதித்து விட்டேன்.
வர இயலாதவர்கள்
இசைக்கருவிகள்
அனுப்பக் கடவதாக...
வரக்கருதி வராதவர்
புனைந்த பாக்களை
அளிக்க கடவதாக...
வந்தோர் யாவரும்
வாசிக்க கடவதாக...
வர மறுத்தவர்கள்
மழையை ரசித்து
வாழ்த்தக் கடவதாக...