காகிதம் தன் வரலாறு கூறுதல்

இன்று நாம் கணினி உலகத்தில் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றோம். இதுவரையான காலப்பகுதிகளில் உலகில் தலைசிறந்த பல கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கண்டுபிடிக்க முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. மக்களின் வரவேற்பைப் பெற்ற தலைசிறந்த கண்டுபிடிப்புக்களுள் முக்கியமானதாக காகிதம் விளங்குகின்றது.

என்னதான் உலகமே கணினிமயமாக மாறினாலும்இ இன்றளவும் காகிதத்தின் உபயோகம் இன்றியமையாத ஒன்றுதான். ஏனெனில் உலகில் பல கண்டுபிடிப்புக்கள் செய்ததைப் பதிவு செய்தல் எனும் அற்புதமான பணியை இந்தக் காகிதம் செய்கிறது. இன்னும் பல கண்டுபிடிப்புக்கள் செய்ய அறிவு அமுதத்தைத் தாங்கி நிற்கும் பாற்கடலாகக் காகிதம் விளங்குகிறது. இந்தக்காகிதம் எவ்வாறு உருவானது என்று உங்களுக்குத் தெரியுமா? சீனா நாட்டவர்களே முதன் முதலில் காகிதத்தை கண்டுபிடித்திருக்கின்றார்கள். சீனர்களின் கண்டுபிடிப்புக்களுள்; காகிதமானது முக்கியமானதொன்றாக விளங்குகின்றது.

உலக வரலாற்றில் முதலாவது அச்சுப் புத்தகம் டைமண்டு சூத்ரா. இந்தப் புத்தகம் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தப் புத்தகம் சீனாவில் காகிதம் புழக்கத்தில் இருந்ததையும்இ காகிதம் செய்ததையும் காட்டுகின்றது. சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷாங் மற்றும் ஷோ ஆட்சிக்காலத்தில் தான் இந்தக் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது. காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் எலும்புகள் மற்றும் மூங்கில்களில் எழுத்துக்களைப் பொறித்துத்தான் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். அவை எடுத்துச் செல்வதற்குச் சிரமமாக இருந்ததால் சில காலம் பழைய பட்டுத்துணிகள் மற்றும் மீன்வலைகள் பயன்படுத்தப்பட்டது. எனினும்இ இந்தச் செயற்பாடு அதிக செலவை ஏற்படுத்தின. மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையினை 105 ஆம் ஆண்டு ஹான் மன்னனின் அரசவையிலிருந்த கை லுன் என்பவர் கண்டுபிடித்ததாக வரலாறு கூறுகிறது. இ காகிதம் எழுதுவதற்காக 3 ஆம் நூற்றாண்டில் தான் யன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் டாய்லட் காகிதங்கள் 6 ஆம் நூற்றாண்டிலிருந்தே உபயோகத்தில் உள்ளதாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை இருந்த டாங் வம்ச ஆட்சிக்காலத்தில் காகிதங்கள் சதுரமாக மடிக்கப்பட்டு அதனுள் தேயிலைத் துகள் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கின்றதாம். அவற்றின் நறுமணம் குன்றாமல் இருக்க இவ்வாறு செய்தனர். இதே காலகட்டத்தில் பல வண்ணக் காகிதக் கோப்பைகளில் தேனீர் அளிக்கப்பட்டதாகவும்இ பல வண்ணங்களில் காகிதக் கைக்குட்டைகள் இருந்ததாகவும் குறிப்புகள்.

எழுதியவர் : (28-Feb-18, 3:12 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 9904

சிறந்த கட்டுரைகள்

மேலே