வேறு என்னசெய்ய
அந்தி தவழ்ந்த கணம்
மழையோடு மௌனமாய்
நடந்த நாய் ஒன்றை
ஏனோ நான்
தொடர்ந்தேன் அவசமாய்...
குப்பைகளினூடே
குறி தெரியக் கிடைந்தவன்
நெஞ்சில் தலை சாய்த்து
கண்ணீரில் சுணங்கியது.
எதிரில் ஓர் கல்லில்
சிலையாய் சமைந்தேன்.
மழை கவ்வி வரும்
காரிருள் அவன்
இடுப்பை மறைத்தவுடன்
இல்லம் கூட்டி
போகவேண்டும்.