கை நழுவியதும்

தெளிவற்ற துவக்கம்
இங்கு துவங்கியது.
நிறுத்தல் குறித்தான
உடன்பாடு இல்லையெனினும்
தொடர்ந்து செல்கையில்
உயிரச்சம் கிளர்ந்தது.
முடிவு பற்றியதொரு
தீர்க்கம் புலப்பட்டதும்
நாம் இனி
அமைதி கொள்வோம்...
அணுகுண்டு முதல்
கவிதை வரையும்.

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Feb-18, 7:15 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 349

மேலே