பசியின் கணக்கு

எவரோ தவறவிட்ட
நெல்லுடன் எலி..
கிளையில் தழையும்
கொடுநாகம்
ஆகாயம் கிழியக்கிழிய
சுழலும் வல்லூறு
எது யாரை
எப்போது உண்ணும்...
கணக்குப்பதிவு உண்டு.
அவை உண்கின்றன.
நாம் கூட...
உன்னை நானும்
என்னை நீயும்
செருக்குடன் தின்னும்
கணக்குகள் தொடரும்.
வயிற்றுப் பசியும்
வக்கிரப் பசியும்
நுட்பமாய் அறிந்த காலம்
கணக்கை மாற்றும்
புன்னகையுடன்...

எழுதியவர் : ஸ்பரிசன் (28-Feb-18, 8:59 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : pasiyin kanakku
பார்வை : 609

மேலே