என் கனவுகள் உனக்காக

கொட்டும் மழையில் ஒரே குட்டையில் - உன்
தோல் உரசி நடக்க ஆசை......

உன் சுண்டுவிரல் பிடித்து
உன் பாதம் தொட ஆசை ......

உன் கால் நகம் வெட்டி விட.....

உன் கையில் மருதாணி வைத்துவிட ஆசை.......

உனக்காய் நான் ஒரு கவிதை எழுதி - அதை
நீ! வாசிக்க நான் கேட்க ஆசை.......

உன் கைக்குட்டை திருட ஆசை ............

உனக்காக காத்தது இருக்க ஆசை...........
காலதாமதமாய் வரும் நீ! - என்
மன்னிப்பிற்காக கைகட்டி நிற்க்க ஆசை .......

நீ! சொல்லும் சின்ன சின்ன பொய்
எப்போதும் கேட்க ஆசை....................

நமக்குள் சின்ன சின்னதாய் வரும்
சண்டைகள் ஆசை ...................... அச்சண்டைக்கு
பின்னல் வரும் சமாதானம் ஆசையோ................. ஆசை..........

என் விரல் காட்டும் வண்ணப் பூக்களை,
வாங்கி தர ஆசை................

சின்ன சிறுகதைகள் பேசி உன் மடியில்,
குழந்தை போல் துயில ஆசை ...............

மலைப்பாம்பாய் நீண்ட தார் சாலையில்,
உன்னோடு ஒரு மிதிவண்டியில் பயணம் போக ஆசை.....................

நீண்ட தூரம் உன் கைவிரல் பிடித்து நடக்க ஆசை.............

பவுர்ணமி இரவில் மொட்டை மடியில்,
உன்னோடு நிலா சோறு உன்ன ஆசை......

வாழ்கின்ற காலமெல்லாம் உன்னோடு வாழ ஆசை.........,
சாகின்ற போது மட்டும் நான் மட்டும் சாக ஆசை..............., - அதுவும்
உன் மடியில் இருந்தால் சுகம்.

எழுதியவர் : சுகன்யா (28-Feb-18, 9:23 pm)
பார்வை : 135

மேலே