மலர்கள்
அரும்பியபோதும்
அழகென்று ஆணவம் இல்லை
மலர்ந்து சிரித்த போதும்
மயக்கம் கொள்ளவில்லை
பூத்து குலுங்கிய போதும்
பூரிப்படைவில்லை
ஈக்கள் வந்து மொயத்தபோதும்
இறுமாப்பு கொள்ளவில்லை
பறித்து நுகர்ந்தபோதும்
நெஞ்சம் பதறவில்லை
வாடிய போதும் வருத்தம் கொள்ளவில்லை
வாழ்வு முடிந்ததென்று
குப்பையில் வீசிய போதும்
கூக்குரலிட்டுஅழவில்லை
மண்ணில் புதைந்தபோதும்
மனம் வருந்தவில்லை
மலரிடம் இருந்து
வாழ்வை கற்றுக்கொள் மனிதா
இறந்த பின்பும் இறவாபுகழ் பெற