மாமிசப் பிண்டங்கள்

அரிக்கும் இயல்பான கரையான்கள்
தன்கூட்டை இயைந்து அரிப்பதில்லை
ஊன் உண்ணும் விலங்கினங்கள் ஒருபோதும்
உணர்வற்று தன்னினத்தை அழிப்பதில்லை .

கருநாகம் குடி கொண்ட கருவேலம்
நஞ்சாகி நஞ்சி மாய்வதில்லை
மலர்த்தேடி தேனருந்தும் வண்டினங்கள்
மென்னிதழை ஒருபோதும் சிதைப்பதில்லை.

விண்பொழிந்து மண் நனைக்கும் வான்பன்னீர்
மண்துகளைக் களைந்துக் கரைப்பதில்லை
விண்ணோக்கி கரம்நீட்டும் மண்தருக்கள்
வேர்களுடன் என்றென்றும் பிணக்கம் இல்லை

தாய்மண்ணை அரிக்கும் கரையான்கள்
தன்னினம் தின்னும் ஊன் உண்ணிகள்
ஆதாரவேர் அழிக்கும் விசக் கிருமிகள்
சேதாரமாய் மனிதவுருவில் வாழும் மிருகங்கள்

இளம்மொட்டைக் கசக்கும் காமுகர்கள்
இதயத்தில் ஈரமற்ற மாமிசப் பிண்டங்கள்
இவை தூரெடுக்கப்படா விட்டால்
வேருடன் அழியும் பேரண்டம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (28-Feb-18, 9:28 pm)
பார்வை : 53

மேலே