மணல்

மணல் குவாரி மீது .........
சவாரி செய்யும்
அரசியல் தலைவர்களே!...
ஆற்று மணலையெல்லாம்
அள்ளி விற்றுவிட்டு
மாற்று கிரகத்திற்கா....உன்
மகன்களை குடியமர்த்த
போகிறாய் ?.

இயற்கை வளங்களை விற்க!
எவனக்குடா ? உரிமையுண்டு
வேற்று கிரகம் தெரியும்வரை ...மணலை
வெட்டி எடுத்து விட்டு
மாற்று சந்ததிக்கு .......
மண்ணிலே ....எதை
விட்டுவைக்க போகிறாய் ?

பஞ்ச பூதங்களையெல்லாம்
பணத்துக்கு விக்கிறாயே ......
உனக்கு மனசாட்சி இல்லையா ?
நினைக்கையில் ...நெஞ்சம்
பதைக்குதடா ?

ஆற்று மணலை விற்று ...
சோற்றை தின்பவனும் ..பெற்ற
ஆத்தா மானத்தை விற்று
சோற்றை தின்பவனும்
ஒன்றுதான் .......ஏன் ?தெரியுமா ?
பூமியும் நமக்கு ......
தாய் தானே ..................

நீரோடிய இடமெல்லாம் ...மணல்
லாரி ஓடிக்கொண்டிருக்கிறது
ஆற்று மணலை எல்லாம்
அள்ளி முடித்து விட்டால் ..இனி
காற்றை கூட காசுக்கு விர்ப்பாயோ !

இஸ்ரோ ...விஞ்சானிகளே
செவ்வாய் கிரகத்தில்
நீர் ....இருக்கிறதா ..என
ஆராட்சி செய்வதைவிட
இனி வரும் காலங்களில்
பூமியில் நீர் இருக்குமா?
என ஆராயுங்கள் ..........


சமூக சிந்தனையுடன் இரா .மாயா

எழுதியவர் : இரா .மாயா (28-Feb-18, 9:34 pm)
சேர்த்தது : மன்னை மாயா
Tanglish : manal
பார்வை : 59

மேலே