முதுமொழிக் காஞ்சி 38

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
அறிவிலி துணைப்பாடு தனிமையிற் றுவ்வாது. 8

- துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் அறிவில்லாதா னொருவனோடு துணைப்பாடு தனிமையின் நீங்கி யொழியாது.

பதவுரை: அறிவிலி - அறிவில்லாதவனை,

துணைப்பாடு - ஒருவன் துணையாகக் கொண்டிருத்தல்,

தனிமையின் - தனித்திருத்தலின்; துவ்வாது - நீங்கி யொழியாது.

அறிவில்லாதவனைத் துணையாகக்கொண்டிருப்பது தனித்திருப்பதற்குச் சமானமேயன்றி வேறாகாது. ஆகவே அறிவில்லாதவனைத் துணைக்கோடல் வேண்டா.

சிற்றினம் சேராமல் பெரியாரைத் துணைக் கொள்க.என்பதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Mar-18, 8:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே