காதலிக்க நேரமுண்டு

நான் அருவியாக
நீ ஜீவநதியாக
நம் காதல் மட்டும்
பாலைவனமாக

நீ இல்லாத உன் வீட்டில்
அனைவரும் சகஜமாக இருக்க
நீ இல்லாமல் நான் மட்டும்
கண்ணீரில் மிதக்கிறேன்

நீ என்னை ஏமாற்றியது
எனக்கு ஒரு அனுபவ பாடமாக
இருந்தாலும் இந்த அனுபவம்
எனக்கு இன்னொருத்தியை
காதலிக்க உதவாதே

நீயும் நானும்
இரு தண்டவாளங்களாக
பக்கத்திலே இருந்தாலும்
ஒன்றாகவே சேருவதில்லை
நம் காதலைப்போல்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Mar-18, 11:04 am)
பார்வை : 492

மேலே