கல்லறை அழைக்கிறது
விண் தூறும் நீர்த்துளிகள்
நட்பின் அறிவுரைகள்...
வடிக்க மறுக்கிறது
மனமெங்கும் நெகிழியாய்
அவள் நினைவுகள்...
உவர்நிலத் தன்மை
தோற்றம் பெறுகிறது
உள்ளக்களத்தில் - அதில்
தழைத்தோங்கி வளர்கிறது
கற்றாழைக் கனவுகள்...
பூந்தோட்ட வாழ்க்கைக்குள்
இதயம் அழுகிய
நாற்றத்தின் வாடை...
கதை பேச ஆளில்லையாம்
அழைக்கிறது
சுடுகாட்டுக் கல்லறை..!!!